பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 8$

வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளல்உன்னை நான்வேண்டிக் கொண்டது நின்அடி யார்க்கு நகைதரும்ஈ தேன்வேண்டிக் கொண்டன என்பார் இதற்கின்னும் ஏன் இரங்காய் தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.

(பொ - ரை.) முக்கண்கொண்ட எல்லாம் கொடுக்க வல்ல வள்ளலே ! உன்னை நான் வேண்டிக் கேட்பது, தேவர் கள் வேண்டிய தேவாமிருதத்தையா? இல்லையே. நான். தேவாம்ருதத்தை உன்னிடம் வேண்டினுல் உன் அடியார்க்கு நகைப்பைத்தான் உண்டாக்கும். அவர்கள் என்னை நோக்கி, நீ ஏன் இறைவனிடம் தேவமுதத்தை வேண்டினை என்பர். எனவே, நீ இன்னும் எனக்கு உன் திருவருளைப் புரிய ஏன் இரக்கம் காட்டவில்லை. ஓர் வேலைக்காரன் தன் எசமான ளிைடம் குடிக்கக் கூழை வேண்டினல், அதைக் கூடக் கொடுக்க அவன் எசமானன் தாமதிக்கலாமோ? (எ . து.)

(அ - பொ.) வான் . மேல் உலகில் உள்ள தேவர்கள்.

மருந்து - தேவனமுதம். நகை - சிரிப்பு.

(இ . ரு.) வள்ளல், அண்மைவிளி. வான், இட ஆகு

பெயர். ஈது, நீட்டல் விகாரம்.

(வி - சை.) தேவாமுதத்தைத் தேவர்கள் உண்டும் இறந்தனர் ஆதலின், அதனைப் பெறுதலில் அவ்வளவு சிறப் பில்லை. ஆகவேதான் அதனை வேண்ட நல் அடியவர்கள் மறுத்தனர். இந்த உண்மையினை உணர்த்தவேதான் நான் வேண்டிக்கொண்டது வான் வேண்டிக் கொண்ட மருந்தோ' என்றும் நின் அடியார்க்கு நகை தரும்' என்றும், ஏன் வேண்டிக்கொண்டன என்பர்' என்றும் வள்ளலார் ஈண்டுக் கூறியுள்ளனர். (58)