பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவருட்பா

பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் படுகின்ருேச் உய்யுரைத் தாஉள்ள தில்லதென் நில்லதை உள்ளதென்றே பொய்யுரைத் தாலும் த்ருவர் பிறரது போல்அன்றிநான் மெய்யுரைத் தாலும் இரங்காமை தின்அருள் மெய்க்கழகே.

(பொ. ரை.) படமெடுத்து ஒலியுடன் ஆடுகின்ற பாம்பை உடலில் அணிந்துள்ள இறைவனே! பாடலைப் பாடுகின்ற புலவர்கள் தாம் வாழவேண்டி ஒருவனிடத்தில் உள்ள குணங்களுள் இருப்பனவற்றை இல்லை என்றும், இல் ல தனவற்றை உள்ளன என்றும் பொய்யாகப் பாடிஞலும் ஒரு சிலர் அப்படி வந்து பாடிய புலவர்களுக்கு ஏதேனும் கொடுத்தனுப்புவர். நான் அவர்களைப் போல் பொய்யாக ஒன்றும் சொல்லாமல் உண்மையினையே சொல்லுகின்றேன், அப்படி இருந்தும் எனக்கு நீ இரக்கம் காட்டாமல் இருப்பது உன் உண்மைப் பண்பிற்கு அழகாகுமா? " (எ-து.)

(அ - செ.) பை பாம்பின் படம். பணி - பாம்பு.

உய் - ஈடேறுதல்.

(இ . கு.) பாடுகின்ருேர், வினையால் அணையும் பெயர். உய், முதல் நிலத் தொழிற் பெயர். இரங்காமை, எதிர்மறைத் தொழிற்பெயர்.

(வி - ரை.) சிவபெருமான், தாருகாவனத்து இருடிகள் செய்த யாகத்தை அழித்த காரணத்தால் கோபம் கொண்டு பாம்புகளே எவி இறைவனேக் கொல்லத் துணிந்தனர். இறைவர் அவர்களின் அறியாமைக்கு இரங்கி அவர்கள் ஏவிய பாம்புகளேத் தம் உடலில் ஆபரணமாகத் தரித்துக் கொண்டார். இதுவே, பணிப்புயத்தோய் என்னும் தொடரில் உள்ள வரலாறு.

இந்த வரலாறு இவ்வாறிருக்க ஒரு புலவர் வேடிக்கையா கத் தட்டானுக்குப் பயந்துதான் சிவபெருமான் பாம்பையே