பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&l.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சென்னை,

திரு. இர. சதாசிவம், l 5 -638 9 سسس 4 سس

சிறப்புரை

வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், அருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் புகட்டியருளிய சன்மார்க்கப் பெரு நெறியை நமது நாட்டில் பரவச் செய்யவென ஆற்றும் பணிகள் பல. அப்பணிகளில் மிகவும் போற்றத்தக்கது வள்ளலார் இயற்றியருளிய திரு வருட்பா முழுவதற்கும் தெளிவுரையினைத் தக்க பெரியாரைக் கொண்டு நூல் வடிவில் 72 பகுதிகளாக ஒவ்வொரு திங்களும் வெளியிட வேண்டுமென்ற பெரும் நோக்கமே ஆகும்.

"எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்' என்னும் பொன்னை திருவருட்பாவினத் தம் உள்ளத்தில் நிறுத்தி, இனித் தமக்குப் பிறவியில்லை என்ற முழு நம்பிக்கை யுடன் திரு. ரசபதியவர்கள் திருவருட்பா விரிவுரை எழுதி முனைந்தாரென்பது, திருவருட்பாவின் முதல் திருமுறையில் முதல் பகுதியாகிய “ திருவடிப்புகழ்ச்சி' எனும் முதல் புத்தகத்திற்கு அவர் எழுதியுள்ள முன்னுரையிலிருந்தே புலப்படும். நான் அந்த முதல் புத்தகத்திற்குச் சிறப்புரை எழுதினேன். அது 1987ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளில் வெளியிடப்பட்டது. திருவருட்யாவின் முதல் திருமுறையில் முதல் ஐந்து பகுதிகளாகிய திருவடிப் புகழ்ச்சி, விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல், சிவதேச வெண்பா, மகாதேவ மாலை ஆகிய இவை, எட்டு விரிவுரை நூல்களாக வெளிவந்துள்ளன. திருவருண் முறையீடு ' ஒன்பதாவது புத்தகமாகப் பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் விரிவுரையுடன் வெளியிடப்படுமென்றும், அதற்கு நான் முகவுரை எழுதவேண்டும் என்றும் நான் எதிர்பார்க்க வில்லை. இதற்குக் காரணம், திரு. ரசபதி அவர்கள் தமக்கு மறு பிறவி இல்லையென்று எண்ணியதற்கேற்ப, வடலூரில் சென்ற தைப்பூச விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பி யதும் பரிபூரண நிலை எய்தியதே யாகும்.