பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவருட்பா

டம் அன்புகாட்டுவதில் குறையுமோ? என்னிடமுள்ள துன் பங்கள் அனைத்தையும், வன்மை சிறிதும் குறையாத உன் திருவடிகளில் என் குறையை முறையிட்டுக் கொள்வதே அல்லாமல், வேறெவரிடமும் சென்று உரைக்கமாட் டேன்." (எ . து.)

(அ - செ.) மடல் - இதழ். அடல் - வன்மை.

(இ - கு.) ஈங்கு, நீட்டல் விகாரம்.

(வி - ரை.) திருவள்ளுவர், நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்தெழிலி, தான் நல்கா தாகி விடின்' என்று கூறியுள்ளனர். இதன் பொருள் மழை தன் நீரைக் கடலுக்குத் தரவில்லை எனில், பெரிய கடலும் தன் தன்மையில் குறையும் என்பது. தன் நீர்மை குன்றும்' என்பதற்கு விளக்கம் தரவந்த பரிமேலழகர் 'தன் இயல்பு குறைதலாவது நீர் வாழ் உயிர்கள் பிறவாமையும் மணி முதலியன படாமையும்’ என்று எழுதினர். இதனுல் கடலுக்கும் குன்றும் தன்மை உண்டு என்பது பெறப்படுகின்றது. இந்த உண்மையினேயே, நம் ஐயா கடல் வற்றிலுைம்' என்னும் தொடரால் உணர்த் திர்ை.

ஒரு சில மலர்கள் வற்றினுலும் தேனேயும் மணத்தையும் கொண்டிருக்கும் என்பதற்குச் செவ்வந்தி மலரையும், மகிழம் பூவையும் உதாரணமாகக் கூறலாம். இந்த உண்மை,

'மலர்ந்த செவ்வந்திப் போதும் வகுளமும் உதிர்ந்து வாடி

உலர்ந்துமொய்த் தளித்தேன் நக்கக் கிடப்பன’’

என்று திருவிளையாடற் புராணம் கூறுதல் கொண்டு தெளியலாம். இந்தக் கருத்தில்தான் நம் ஐயச, மடல் வற்றிலுைம் மணம் வற்ருத மலர்' என்றனர். இறைவன் திருவடிகளின் வன்மையினே நம் அப்பர்,