பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 73

"சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியில் சந்திரனே வீட எடுத்தது காலன நாரணன் தான்முகனும் தேட எடுத்தது தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதம்அன் ருேநம்மை ஆட்கொண்டதே' என்று பாடி உணர்த்தியுள்ளனர். இந்தக் கருத்தில்தான் நம் வள்ளலார் அடல் வற்றுருத திருவடி' என்று பாடிக் காட்டினர். (60)

எள்வி குக் கின்றதற் கேனும் சிறிதிடம் இன்றி.என்.பால் முள்ளிருக் கின்றது போல் உற்ற துன்ப முயக்கம்எல்லாம் வெள்ளிருக் கின்றவர் தாமும்கண் டார் எனில் மேவிஎன்தன் உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் முடையவனே.

(யொ - ரை.) எங்களை அடிமையாகக் கொண்ட முதல்வனே! வடிவில் சிறிய எள் இருப்பதற்குக்கூடச் சிறிது இடமும் இல்லாதபடி, என் உடலம் எல்லாம் முள் தைப்பது போல் வருத்தும் துன்பச் சேர்க்கை யாவற்றையும் வெளியில் இருக்கின்றவர்கள் காண்பார்களானுல் அவர்கள் உன்னிடம் வந்து, என் மனத்தில் இடம் கொண்டுள்ள உன் திருவடி களில் வந்து கூறுவானேன்.? நீயே தெரிந்து அத்துன்பங்களே நீக்க வேண்டாவோ?" (எ . து.)

(அ - செ.) துன்ப முயக்கம் - துன்பச் சேர்க்கை. (சேர்ந்துள்ள துன்பம்) வெள் இருக்கின்றவர் . வெளியில் இருப்பவர்கள்,

(இ - கு.) ஒதுதல் என்பது ஒதல் என நின்றது தொகுத் தல் விகார இலக்கணம் பற்றி எனக.

(வி - ரை.) வள்ளலார் தம் திருவுள்ளத்தில் எப்போதும் சிவபெருமானின் திருவடிகளே நினைந்த வண்ணம் இருத்தலின் 'என் தன் உள் இருக்கின்ற நின்தாள்' என்றனர். எள் இருக்கின்றதற் கேனும் சிறிதிடம் இன்றி' என்னும் வரியைப்