பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவருட்பா

படிக்கும்போது, "எள் இருக்கும் இடன் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி' எனும் கம்பன் வாக்கு நினேவுக்கு வருகிறது. துன்பத்தின் கொடுமையை விளக்க, 'முள் இருக்கின்றது போல் உற்ற துன்பம்" என்றனர். வெள் இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி ஒதல்என்? ' என்று வள்ள லார் வினவுவதன் கருத்து இறைவா! என் துயரைப் பற்றிப் பிறர் உன்னிடம் வந்து உரைத்த பிறகோ நீ உணர்வை? என் உளத்தில் நிற்கின்ற நீ உணராயோ? ஆகவே, நீயே உணர்ந்து அருள்புரிக' என்று வேண்டியவசரும், (31), பொன்கின்று பூத்த சடையாய்.இவ் ஏழைச்குன் பொன்அருளாம் நன்கின்று நீதரல் வேண்டும் அந் தோதுயர் தண்ணிஎன்னைத் தின்கின்ற தேகொடும் பாம்பையும் கல்உச்ை செய்துகொலார் என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கீரங்கிடினே.

(பொ - ரை.) பொன்னிறம் பெற்ற கொன்றைமலர் விளங்கும் சடையுடைய பெருமானே! இந்த ஏழைக்கு உனது அருளாகிய பொன்னே நீ எனக்கு நன் முறையில் தந்தருள வேண்டும். ஐயோ! உலகத் துன்பம் என்னே அணுகி என்னை அழிக்கின்றதே! கொடிய பாம்பையும் பால் ஊட்டி வளர்த்தவர்கள் கொல்லமாட்டார்கள் என்று கூறுகின்ற, இந்த உலக மக்கள், நீ எனக்கு இரக்கம் காட்டில்ை உன்னக் குற்றம் கூறமாட்டார்கள்' (எ , து).

(அ - ச்ெ 1.) நண்ணி-அணுகி. ஞாலம் - உலகமக்கள். (இ . கு. கின்று, ஒர் அசைச்சொல். ஞாலம், ஞா லத்தில் உள்ள மக்களே உணர்த்தலின் இட ஆகுபெயர்,

வாய்மூடிக் கொல்பவர் போலேவன் உள்ளத்தை வன்துயரம் பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச் சேய்மூடிக் கொண்டுநல் பாற்கழக் கண்டும் திகழ்முலையைத் தாய்மூடிக் கொள்ளுவ துண்டே அருளுக் சங்கரனே.