பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 75

(பொ , ரை.) எல்லோருக்கும் இன்பம் செய்யும் இறைவனே ! கூச்சல் இடாமல் இருப்பதற்கு வாயில் துணியை அடைத்துக் கொள்பவர்களைப் போல் என் மனத்தைக் கொடிய துன்பமாகிய பேய் மூடிக்கொண்டது. இதற்கு நான் என்ன செய்வேன்? குழந்தை, அழகுடன் விளங்கும் தன் கையால் தன் முகத்தை மூடிக்கொண்டு தாயை நோக்கித் தனக்குப் பால் தரும்படி அழுதால் குழந்தை தன்னைப் பார்க்கவில்லை என்று எண்ணி எந்தத் தாயாகிலும் தன் முலையை மூடிக் கொள்வாளா ? மூடிக் கொள்ள மாட்டாள். அனைத்துயிர்க்கும் தாயாகிய இறைவா! நீ உன் குழந்தை போன்றவளுகிய எனக்கு அருள் செய்யாமல் இருப்பாயா? அருள் செய்வாயாக." (எ . து.)

(அ - சொ.) சங்கரன் - இன்பம் தருபவன். பிறங்கு திகழ் - விளங்கும். சேய் - குழந்தை.

(i - ரை.) தாய்க்கும் சேய்க்கும் இருக்கின்ற நெருக்க. மான தொடர்பைக் குலசேகராழ்வார் பாடியுள்ள

' அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழும் குழவி "

என்று பாடியுள்ள பாட்டைக்கொண்டு தெளிக. (вз)

கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்வித் தேன்.வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர் வான்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய் ஆள்வேண்டு மேல்என்ன யாள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.

(பொ. - ரை.) தீமையையே விரும்பும் என் மனத்தை வேருக்கி, அதனை மேலும் துன்புறுத்தத் தேள் வேண்டுமா ? சுட்டெரிக்கத் தீ வேண்டுமா ? வதை செய்ய வாள் வேண்டுமா? என்னிடம் பொருந்தியுள்ள துயரம், கொடுமை