பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 77

தோன்ற நம் ஐயா பாடி இருப்பது படித்து இன்புறுதற்குரியது. 'நீ நடந்து வரவேண்டியது இல்லையே. இரடப வாகனத்தில் விரைவில் வந்து அருள் செய்ய வரலாமே. உன்னிடம் சூலம், மழு முதலான ஆயுதங்கள் இருக்கின்றனவே. அவற்றைக் கொண்டு என் துன்பங்களை வெட்டி வீழ்த்தலாமே என்று கூறி இருப்பனவற்றை ஊன்றி நோக்குக. இவ்வாறே இவருக்கு முன்பு சுந்தரரும் இறைவர் இரடபம் ஏறிவந்து அருள் செய்யலாமே என்பதை,

முடவர் அல்லீர் இடரிலீர் முருகன் பூண்டிமா நகர்வாய் இடபம் ஏறியும் போவ தாகில் நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம் பிரானிரே என்று பாடி உணர்த் தி யுள்ளனர்.

இறைவர் படைகளேப் பெற்றிருப்பதைக் குமரகுருபரர்

' ஏற்ருன் பரசும் பிகைமும் சூலமும் என்னே

கரமலர் சேப்பக் கோளல்.' என்பர். சைவ எல்லப்ப நாவலரும்

சூலப் படையேன் மழுப்படையேன் சுமந்தீர் அருணை அமர்ந்தீரே ’’ என்பர். இவற்றை உணர்ந்தே ஈண்டு 'படைஇலையோ துயர் எல்லாம் துணிக்க, என்றினர். இறைவனிடம் நிரம்பக் கொடைக் குணம் உண்டு. இந்த உண்மையினைச் சம்பந்தர்,

பண் ஒன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண் அன்றி விண்கொடுக்கும் மணிகண்டன் ' என்று கூறுதல் காண்க. இதனை அறிந்தே நம் வள்ளலார் 'அருள் கொடை இலயோ ? என்று வினவி விளக்குவார் ஆயினர்.

எப்போதும் ஆண்களினும் பெண்கள் அருளுடைய வர்கள். தம் மக்கள் மீது தந்தைக்குப் பெருஞ் சினம்