பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவருட்பா

இருப்பினும் அதனைத் தாய்மார்கள் பக்குவமாகத் தம் கணவன்மார்களிடம் பேசிக் கோபத்தை மாற்றிவிடுவார்கள். மனைவிமார்கள் இன்றெனில் தந்தையர் கடின நெஞ்சுடைய வர்களாகவே இருப்பர். இந்த உண்மையினைக் கம்பர், வாலியின் வாய் மூலம் நன்கு விளக்கியுள்ளனர். இராமன் மறைந்து நின்று தன்மீது அம்பு எய்து கொன்றது, பக்கத்தில் சீதை இல்லாமையினுல்தான் என்பதை வாலி,

கோவியல் தருமம் உங்கள் குலத்துதித் தோர்கட் கெல்லாம் ஒவியத் தெழுத ஒண்ணு உருவத்தாய் உடைமை அன்ருே ?

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ் தில் வந்த தேவியைப் பிரிந்த பின்னத் திகைத்தினை போலும் செய்கை, என்று கூறி அறிவித்தல் காண்க. இதனே உளத்தில் கொண்டே நம் ஐயா,

' குறைதீர நல்கக் குலவும் என்தாய்

புடைஇலை யோஎன் தனக்காப் பேச ' என்றனர். 185)

நறை உள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நல்சடைமேல் பிறை உள தேகங்கைப் பெண் உள தேயிறங் கும்கழுத்தில் கறைஉள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன் குறைஉள தேஎன் ரற்றவும் சற்றும் குறித்திலதே.

(பெ. . ரை.) தேன் நிரம்பிய இனிய பூவாகிய கொன்றைமலர் பொருந்திய நல்ல சடைமீது சந்திரன் இருக்கின் ருனே : கங்கை ஆறும் அச்சடையில் பொருந்தி இருக்கிறதே கழுத்தில் எவரும் காணும் முறையில், விடம் இருக்கிறதே. இவ்வாறெல்லாம் உன்னிடம் இவை பொருந்தி இருப்பதல்ை நீ அருள் உடையவன் என்று அறிகின்றேன். இவ்வாறு உன்னருள் உடைமையினே நான் அறிந்திருந்தும் இப்போது அந்த அருள் எங்குச் சென்று ஒளிந்துளதோ ?