பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 79.

கடையவனை என்னிடம் ஏதேனும் குறையுளதோ என்று தான் கூவி முறையிடவும் சிறியேனசிய எனக்கு அருள் செய்ய உன் உள்ளம் எண்ணவில்லையோ." (எ . து.)

(அ . சென்.) நறை - தேன், பிறங்கும் - விளங்கும். தேன் - இனிய, கறை - விடம், அரற்றவும் . வாய்விட்டுக் கதறவும், குறித்தல் - மனத்தில் எண்ணுதல்.

(இ.கு.) தேன் + மலர், பிறை உளதே, கறைஉளதே குறித்திலதே என்பனவற்றில் உள்ள ஏகாரங்கள் அசை. குறையுளதே, என்பதின் உள்ள ஏகாரம் விஞ.

(வி - ரை.) இறைவன் கருணை உள்ளவன் என்ப தற்குப் பிறையும், கங்கையாறும். விடமுமே போதுமான சாட்சிப் பொருள்கள் ஆகும். எவ்வாறெனில் எல்லாக் கலை களும் குறைபட்டு வருந்திய சந்திரக்னத் தன் சடையில் குடி அன்ை கலைகள் வளரத் திருவருள் புரிந்தான். பகீரதன் பெருமுயற்சியுடன் கொண சிந்த கங்கையின் வேகத்தை தன் சடையில் அடக்கிப் பின் பகீரதன் வேண்ட இமய மலையில் சிறிது பாய்ச்சி அவன் வேண்டுகோளை நிறைவேற்றி னர். தேவர்கள் விடத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது அவர்கள் அச்சத்தைப் போக்க அந்த விடத்தைத் தான் உண்டு தன் கழுத்தில் தங்க வைத்தான். இவ்வாறு பேரருள் பெருங்கருணை உடையவன் இப்போது தமக்கு அருளாமை யினல் அருள் எங்குளதோ என்று விநயமாக ஐயா வின வினர். அன்பர்கள் தம் முன்னப்பு அற்றுத் தம்மைக் கடையவ னேன் என்று கூறிக் கொள்வது மரபு . மணிமொழியாரும் தம்மைக் கடையவனேகனக் கருணையினுல் கலந்தாண்டு கொண்ட விடையவனே" என்று கூறுதல் காண்க. அவரது திருவாக்கை ஒட்டி நம் ஐயாவும் 'கடையவனேன்' என்று கூறிக்கொண்டனர். (36)