பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவருட்பா

சினத்தாலும் காமத்தி லுைம்என் தன்னைத் திகைப்பிக்கும் மனத்தால் உறும்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும் இனத்தாலும் வாழ்க்கை இடும்பையிலுைம் இளைக்கவைத்தாய் அனத்தான் புகழும் பதத்தோய் இதுதீன் அருட்கழகே.

(பொ-ரை.) அன்னப்பறவையை வாகனமாகக் கொண்ட பிரமதேவன் புகழ்ந்து பேசும் திருவடிகளையுடைய இறை வனே ! கோபத்தாலும், காம இச்சையாலும் என்னை திணற வைக்கும் இந்த மனத்தால் நான் அடையும் துன்பம் போதாது என்று உன் திருவுளத்தில் எண்ணி, என்னைச் சுற்றியுள்ள உறவினர்களாலும், உலக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திலுைம் இவ்வாறு சோர்ந்து போகும்படி உலகில் நிலைபெறச் செய்துள்ளாய் போலும் ! இப்படிச் செய்வது உன் திருவருளுக்கு அழகாகுமா? ' (எ . து.)

(அ - செ.) அனத்தான் - பிரமன். சினம் - கோபம், இடும்பை - துன்பம்.

(இ - கு.) அன்னத்தான் என்பது அனத்தான் என் றிருப்பது இடைக்குறை பற்றி என்க. பாதத்தோய் என்பது. பதத்தோய் என்ருயது குறுக்கல் விகாரம் பற்றியாம்.

{வி - ரை.) மக்களைக் கெடுப்பவை காமம், கோபம், மயக்கம் என்பன. இதனைத் திருவள்ளுவர். 'காமம், வெகுளி மயக்கம் இவை மூன்றன், நாமம் கெடக்கெடும் நோய்' என்பர். திருமூலரும், க்ாமம், வெகுளி, மயக்கம் இவை கடிந்து' என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்துக்களுக் கேற்பவே நம் வள்ளலார், “சினத்தாலும், காமத்திலுைம் என்னத் திகைப்பிக்கும் இம் மனத்தால் உறும்துயர்" என்றனர். (87)