பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார் பல நூல்கள் இயற்றியும், சொற்பொழிவுகளாற்றியும், தமிழுக்கும் சமயத் திற்கும் பாராட்டுதற்குரிய முறையில் தொண்டாற்றி வரு கிருர். எளிதில் புரிந்துகொள்ள முடியாத திருமூலர் திரு மந்திரத்தில் 365 செய்யுட்களுக்கு, படிப்பவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் பொருள் எழுதியிருக்கிரு.ர். எந்த ஆசிரியர் தம் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி பாடல்களைப் போதிக்கின் ருரோ, அந்த ஆசிரியரே தம் பணியைச் சரிவரவும், வெற்றிகரமாகவும் செய்பவர் என்னும் கருத்தைப் பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார் கடைப் பிடிப்பவர் என்பது திருவருட்பா முதல் திருமுறை ஆரும் பகுதியான 'திருவருண் முறையீடு ' என்னும் பாகத்திற்கு, அவர் எழுதியுள்ள ஒன்பதாம் விரிவுரை நூலின் வாயிலாக விளங்கும். பொழிப்புரையையும், விசேட உரையையும் மட்டும் கொடுப்பதோடன்றி, அருஞ்சொற்களையும், இலக் கணக் குறிப்புகளையும் உரையாசிரியர் விளக்கியிருப்பது ஒரு சிறப்பான மாறுதலாகும்.

திரு. இராமலிங்க சுவாமிகளின் அருளுரைகள் பலவும், அவர் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளும், கடவுள் வழிபாட்டு முறையும், திருவருள் முறையீட்டில் காணப் பெறுகின்றன. திருவருட்பாவின் ஏனைய 64 பாகங்களும் வடார்க்காடு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் திட்டப்படி பேராசிரியர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்கள் உதவி யுடன் இனிதே நிறைவேற வேண்டுமென்று இறைவன் திருவருளே இறைஞ்சுகிறேன்.

நான் செய்த புண்ணியம் யாதோ சிவாய நமஎனவே

ஊன்செய்த நாவைக்கொண் டோதப் பெற் றேன் என

ஒப்பவர்.ஆர்."

இர. சதாசிவம்.