பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 8 H

புலஅளவயினும் சயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச் சொல்அள வாlன் றிரப்போர் இரக்கநல் சொன்னங்களைக் கல்அள வாத்தரு கின்ருேர்தம் பாலும் கருதிச்சென்ருேர் நெல்அள வாயினும் கேளேன்நின் பால்அன்றி நின்மலனே.

(பொ. ரை.) மிகத் துாயோனே! புல்லின் அளவேனும் கூடக் கொடுக்காதவர்களின் வீட்டு வாயிலின் நுழைந்து அவர்களைப் புகழ்ந்துபேசிக் கெஞ்சிக் கேட்போர்கள் கெஞ்சிக் கேட்கட்டும். ஆல்ை, நான்மட்டும் நல்ல பொன்னேச் செங்கல் அளவுக்குக் கொடுக்கக் கூடியவர்களிடமும் சென்று ஒரு நெல் அளவுகூடக் கேட்கமாட்டேன். அப்படிப் பொன் வேண்டும் என்று கேட்பதானுலும் உன்னிடமே கேட்பேன்." (எ . து.)

(அ - சொ.) நின்மலன் - தூயவன் (அழுக்கு இல்லாத வன்). இரப்போர் - கெஞ்சிக் கேட்பவர். சொன்னம். பொன். பால் . இடம்.

(இ.கு.) வாயில் என்பது இலக்கணப் போலி. இரக்க, வியங்கோள் வினைமுற்று. பால், ஏழன் உருபு.

(வி - ரை.) புல், நெல் அளவின் சிறுமையினைக் குறிக்க வந்துள்ளன. கல், பருமையைக் குறிக்க வந்துளது. இந்தப் பாட்டின் கருத்துடன் முப்பத்திரண்டாவது பாட்டையும் ஒப்பிட்டு நோக்குக. (68)

பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யே.எம் பெருஞ்செல்வமே கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதல் கண்கரும்பே மறைசூழ்த்த மன்ருெளிர் மாமணி யே.என் மனமுழுதும் குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே. (பொ. ரை.) பிறைச்சந்திரனே அணிந்த சடைமுடி புடைய இனிய கனியே! எங்கள் பெருஞ்செல்வமே 1 விடம்

6