பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவருட்பா

பொருந்திய கழுத்தையுடைய கற்பக விருட்சமே 1 நெற்றியில் கண்படைத்த கரும்பே வேத ஒலி நிறைந்த தில்லைச் சிதம் பரத்தில் விளங்கும் சிறந்த மாணிக்கமே! என் உள்ளம் முழுதும் குறைபாடுகள் நிரம்பி யுள்ளது. இதற்கு நான் என்ன செய்வேன்? அன்புகூர்ந்து என் குறைகளை நீக்க உன் திரு வுள்ளத்தில் நாட்டம் கொள்வாயாக" (எ . து.)

(அ - சொ.) வேணி - சடை, கறை - விடம். பிறை - பிறைச் சந்திரன். கண்டம் - கழுத்து. துதல் - நெற்றி. மறை - வேதம். மன்று - நடன் சபை. மா - சிறந்த,

(இ . கு.) வேணிமுடி . இருபெயர்ஒட்டுப் பண்புத் தொகை. மா . உரிச்சொல். (69)

கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு பெண்கட்டி யாள நீனைக்கின்ற ஒர்சிறு பிள்ளையைப்போல் எண்கட்டி யான் உன் அருள் விழைத் தேன்சிவ னேஎன்நெஞ்சம் புண்கட்டி யாய்அலேக் கின்றது மண்கட்டிப் போல்உதிர்ந்தே.

(பொ. - ரை.) சிவபெருமானே ! கண்ணக் கட்டிக் கொண்டு விளையாடும் சிறு பருவத்தில், முலையுடைய ஒரு பெண் கணக் கட்டித் தழுவ நினைக்கின்ற ஒரு சிறுவனப்போல், என் எண்ணத்தில் உன்னத் தழுவி இன்புற உன் திருவருகச விரும்புகின்றேன். ஆல்ை, என் மனம் உன் திருவருளைப் பெருத காரணத்தால் புண்ணுகிய கட்டியைப்போல் துன்பத் தால் அலகிறது. மேலும் மண்கட்டியைப்போல் உதிர்ந்து வாடிப் போகிறது. (எ . து.)

(அ - சொ.) எண் - எண்ணம். விழைந்தேன் - விரும்பினேன்.

(வி - ரை.) கண்கட்டி ஆடுதல், குருட்டாட்டம் ஆடுதல் * குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும்