பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 83

குழி விழுந்த வாறே" என்று திருமந்திரம் கூறுதல் காண்க சிறுவன் வயதான பெண்ணை விரும்புதல் அகப் பொருள் இலக்கணத்தில் பெருந்திணை எனப்படும். அதாவது பொருந் தாக் காமம் என்ப. இங்கு நம் ஐயா இந்த உவமை யினைக் கூறியதன் நோக்கம் தாம் இறைவன அடைதற்குரிய பக்குவம் பெருமையினே அறிவிக்கவே ஆகும். (70)

மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுத்துயர் வெந்நெருப்பில் நெய்விட்ட வாறித்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தையஇப் பொய்யினை நீ கைவிட் டிடநீன யேல் அருள் வாய்கரு கணக்கடலே.

(பொ. ரை.) பொய்யை ஒழித்த மெய் அன்பர்களின் உள்ளத்தில் பொருந்திய அழகிய திருவடிகளையுடைய தலைவ ! அன்புக் கடலே ! உண்மையினைக் கைவிட்ட வஞ்சனை பொருந்திய மனத்தில் படும் துன்பம் கொடிய நெருப்பில் நெய்யை விட்டது போல் இந்த உலக வாழ்க் கையின் வேதனை மிகுதியால் வளர்ந்துளது ஆகவே, இந்தப் பொய்யளுகிய என்ன நீ கைவிடாதே; அருள் செய்க '.. (5ा - g•)

(அ . சொ) உறும் - பொருந்தும். விட்டவாறு விட்டது போல. வாதனே - வேதனை. பொன் - அழகிய.

(இ - கு.) பொன் + பதத்து + ஐய. வெம்மை+நெருப்பு. இறைவன் நம்மிடம் பொருந்த வேண்டுமானல், நாம் பொய்யை ஒழித்து மெய்யுடையராய் விளங்க வேண்டும். இந்த உண்மையினைத் திருநாவுக்கரசர்

மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை

(வித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறைஎனும் நீரைப்

(பாய்ச்சி, தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி இட்டுச் செம்மையுள் நிற்பர் ஆகில் சிவகதி விளையும் அன்றே.