பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவருட்பா

என்று அறிவித்துள்ளார். இந்த நோக்கம் கொண்டே தம் வள்ளவார் பொய்விட்ட நெஞ்சு உறும் பொன் பதத்ததுஐய' என்று பாடி அருளிஞர். (71)

அருட்கட லேஅக் கடல்அமு தேஅவ் அமுதத்துற்ற தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற பொருட்பத மேஅப் பதத்தர சேதீன் புகழ்நீணயா இருட்குண மாயை மனத்தே னயும் உவந்தேன்றுகொள்ளே

(பொ. - ரை,) அருளாகிய கடலே அக்கடலில் எழுந்த அமுதமே ! அவ்வமுதத்தில் நிறைந்த தெளிவான சுவையே ! அச்சுவையின் பயணுக உள்ளவனே ! வேதத்தின் உச்சியில் அமர்ந்து எல்லாப் பொருள்களும் தோன்றி மறை தற்குக் காரணமாக உள்ள திருவடிகளே யுடையவனே! அத் தகைய திருவடிகளைக் கொண்ட நடராசப் பெருமானே ! உன் திருப்புகழை நினைக்காத அஞ்ஞான இருட் குணம் பொருந்திய மாயாமலம் குடிகொண்ட மனத்தையுடைய என்னையும் நீ மகிழ்வுடன் ஏற்றருள வேண்டும்." (எ . து.)

(அ . சொ.) தெருள் - தெளிவு. மறைச்சென்னி - வேதத்தின் சிகரமான உபநிடதங்கள், உவந்து - மrை மகிழ்ச்சியுடன். ஏன்றுகொள் ஏற்றுக் கொள்வாயாக,

(வி . ரை.) திருப்பாற்கடலில் தோன்றும் அமுதம் இறப்பை ஒழிக்காது. இந்த அமுதத்தை உண்ட தேவர் களும் மறைந்து போயினர். ஆல்ை, இறைவனுகிய அருட் கடலில் தோன்றும் அமுதம் பிறவிப் பிணியைப் போக்கிப் பேர் இன்பப் பேற்றைத் தரவல்லது. ஆகவேதான் அருட் கடலே அக் கடல் அமுதே என்று திருப்பாற் கடலில் தோன் றிய அமுதத்திற்கும் அருட்கடலில் தோன்றிய அமுதத்திற்