பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 85

கும் உள்ள வேறுபாட்டை ஈண்டு உய்த்துணரவைத்தனர். நம் ஐயா, சிவானந்த அமுதுண்டவர். இறைவன் அடியில் என்றும் இன்புற்றிருப்பதே ஈண்டு சுவ்ைப்பயன் ஆகும். (72)

அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநீன் கண்டங்கண் டார்க்கும் சடைமேல் குறைந்த கலைமதியின் துண்டங்கண் டார்க்கும் பயம் உள தோஎனச் சூழ்ந்தடைந்தேன் தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணைஅடிக்கே.

(பொ. ரை.) உலகங்களைப் படைக்கும் பிரமனும், அவ்வுலகங்களைத் தன் பாதத்தால் அளந்த திருமாலும் பார்ப்பதற்கரிய பரம்பொருளே ! உன் கழுத்தில் விடம் பொருந்தி இருப்பதைப் பார்க்கின்றவர்களுக்கும் உன் சடை மீது ஒளியுடைய பிறைச் சந்திரன் இருப்பதையும் பார்க்கின்ற வர்களுக்கும் இறைவன் காப்பானே ? காக்கமாட்டானே என்னும் அச்சம் உண்டாகுமோ ? ஆகாது. ஆகவேதான் நான் நன்கு ஆய்ந்து உன்னைச் சரண் அடைந்தேன். நான் உன் அடியவன். உன் இரண்டு திருவடிகட்குப் பல வணக் கங்களைச் செய்கின்றேன். எனவே, என்னே ஆட்கொண்டு அருள் செய்வாயாக '. (எ . து.)

(அ - சொ.) அண்டம் - உலகம். கண்டான் - படைத்த வனை பிரமன். அளந்தான் . உலகை அளந்த திருமால். கண்டம் - கழுத்து. கல் - ஒளி. மதி - சந்திரன். சூழ்ந்து - நன்கு ஆராய்ந்து. தெண்டன் - வணக்கம். துணை - இரண்டு.

(இ கு ) கண்டு + ஆள். கண்டாய், முன்னிலே அசைச் சொல்.

(வி - ரை.) இறைவன் கழுத்தில் விடம் இருப்பதையும் சடையில் பிறைச் சந்திரன் இருப்பதையும் கண்டவர்களுக்கு