பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

385 திருவருட்யா

அச்சம் இல்லை என்பதன் கருத்து, தேவர்களின் அச்சத் தைத் தீர்த்தமைக்கு அடையாளமாகப் கழுத்தில் விட்ம் இருக்கிறது என்பதும், சந்திரன் தன் கலைகளை இழந்து வருந்திய வருத்தத்தைத் தீர்த்து அவனைத் தன் சடையில் குடி அச்சத்தைத் தீர்த்தான் என்பதும் ஆகும்.

சிவபெருமானே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைச் செய்பவன். ஆயினும் ஒவ்வொரு தொழிலை இயற்றுதற்கு ஒவ்வொருவரை நியமித்துள்ளான் என்பது அறிஞர் கருத்து. இந்த உண்மைகளே முறையே திருவாசகம்,

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்கும் கடவுள் காப்பவை. கரப்போன் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள். என்றும்,

பிரபுலிங்க லீலை.

ஆக்குறும் செயல தொன்றே அயன் தனக் காக்க லோடு காக்குறும் செயல்இ ரண்டும் கண்ணனுக் காக்கல் காத்தல் போக்குதல் என்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன்

என்றும் கூறுதல் காண்க. இந்தக் கருத்தில் தான் 'அண்டம் கண்டானும்' என்று பிரமனைக் குறிப்பிடப்பட்டான்.

மாவலி சக்ரவர்த்தி எல்லா உலகங்களையும் தன் கீழ்ப் படுத்தி அரசாண்டான். அந்த நிலையை அழிக்கத் திருமால் குட்டை வடிவில் மாவலியிடம் சென்று, தான் தவம்புரியத் தன் அடியால் மூவடி மண் (இடம்) வேண்டும் என்று கேட்டனன். அவன் திருமாலே வாமனனுக (குள்ள வடி விண்ணுக) வந்துளான் என்பதை உணராமல், அவ்வாறே கொடுத்து விட்டனன். உடனே திருமால் நீண்ட வடிவு