பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 87.

கொண்டு மேல் உலகங்களையும் கீழ் உலகங்களையும் தன் அடியால் அளந்து ஒர் அடிக்கு இடம் இன்மையால் மாவலி αθεστ தலை மேல் வைத்து அவனைப் பாதளத்தில் இருக்கச் செய்தான். இதுவே அளந்தான் என்னும் சொல்லில் அமைந்த வரலாறு.

ஒரு முறை திருமாலும் பிரமனும் தமக்குள் நான் பெரியன்; நான் பெரியன்' என்று வாதாடித் தம் வாதத்தைத் தீர்த்துக் கொள்ளச் சிவபெருமானை அடையச் சிவபெருமான் தீப்பிழம்பாய் நின்று யார் என் முடியையும் அடியையும் கண்டு பிடிக்கின்ருர்களோ, அவர்களே பெரியவர்கள் : என்று அருள் கட்டளை இடப் பிரமன் அன்னவடிவெடுத்து முடியைக் காண விண்ணில் பறந்தும், திருமால் அடியைக் காணப் பன்றி வடிவெடுத்து நிலத்தைத் தோண்டியும் இரு வரும் காண இயலாது திரும்பினர். இந்ந வரலாறே * அண்டங் கண்டானும் அளந்தானும் காண்டற் கரியவ ' என்னும் வரியில் அமைந்துளது. இதன் விரிவைக் கந்த புராணத்தும், அருணசல புராணத்தும் காண்க. இந்த வரலாற்று உண்மையைத் திருவாசகம் 'பிரமன்மால்காணுப் பெரியோன்” என்று போற்றுகிறது. பரம வைஷ்ணவராகிய பாரதம் பாடிய வில்லிபுத்துார் ஆழ்வாரும் ஒர் ஏனம் தனத் தேட ஒளித்தருளும் இரு பாதத் தொருவன் ” என்று திருமால் சிவபெருமான் நிருவடிகளைத் தேடியதை எடுத்துக் கூறியுள்ளார். (78)

தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை ஆட்டக்கண் டேன்.அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும் கேட்டுக்கண்டேன்இல நான் ஏழை நெஞ்சக் கிழக்குரங்கால் வேட்டுக்கொண் டாடுகின் றேன்.இது சான்ற வியப்புடைத்தே.