பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவருட்பா

(பொ. ரை.) விருப்பமான கற்கண்டைப் போன்றதும் அழகியதும் ஆன மொழிகளைப் பேசும் பார்வதி தேவியின் கண்வனே ! உலகத்தில் சிலர் குரங்கைத் தாம் சொல்லுகிற படி ஆடச் செய்வதை நான் பார்த்திருக்கிறேனே அல்லாமல், அக்குரங்கில்ை ஆட்டப் படுகிறவர்களும் உண்டு என நான் காதால் கேட்டதும் இல்லை; கண்களால் கண்டதும் இல்லை. தானே அறிவு குறைந்த ஏழை. ஆல்ை, நான் மனமாகிய கிழக் குரங்கு தன் விருப்பம் போல ஆட்ட ஆடுகின்றேன். இஃது ஆச்சரியம் நிறைந்த செயலாக அன்ருே இருக்கிறது." (எ . து.)

(அ - சொ.) தேட்டம் - விருப்பம். கண்டு - கற் கண்டு. ஏர் . அழகு. கண்டேர் மொழி . பார்வதி. வேட்டு . விருப்பம், சான்ற நிறைந்த,

(இ . கு.) கண்டேர் மொழி என்பது கற்கண்டை போலும் இனிய மொழியைப் பேசும் உமா தேவியைக் குறிக் கின்றமையின், இஃது அன்மொழித் தொகை. சான்று, உரிச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயர் எச்சம், (74)

போகம்கொண் டர்த்த அருள் ஆர் அமுதப் புணர்முலையைப் பாகம்கொண் டார்த்த பரம்பொருளேதின் பதம்தினையா

வேகம்கொண் டார்த்த மனத்தால்இல் ஏழை மெலிந்துமிகச் சோகம்கொண்டார்த்துநீற் கின்றேன் அருளத் தொடங்குகவே.

(பொ. ரை.) இன்பத்தைத் தன்னிடத்தே கொண்டு நிறைந்த அருளும், அமுதமும் நிறைந்த முலைகளையுடைய உமாதேவியை, இடப்பாகத்துக் கொண்டு எங்கும் நிறைந் துள்ள மேலான பெரிய பொருளாம் சிவமே ! உன் திருவடி களை நினைக்காமல் உலக இச்சையின் வேகத்தில் கட்டுப்பட்ட உள்ளத்தால் இந்த ஏழையாகிய நான், மிகவும் வாடி