பக்கம்:திருவருட்பா விரிவுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருள் முறையீடு 89

சோர்வு கொண்டு, சேர்வால் கட்டுண்டு நிெற்கின்றேன். ஆகவே என்நிலையினை உணர்ந்து எனக்குத் திருவருள் புரியத் தொடங்குவாயாக." (எ ச்து.)

(அ சொ.) போகம் . இன்பம். ஆர்த்த - நிறைந்த. கட்டுப்பட்ட். புணர் . இண்ைந்த சோகம் - சோர்வு.

(இ - கு) அருள் அமுதம், உம்மைத் தொகை. அருள் அமுதப் புணர்முலை, அன்மொழித்தொகை, நினையா, ஈறு. கெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம்.

(வி - ரை.) திருநள்ளாற்றின் தேவியின் பெயராகிய போகமாத்த பூண் முலையாள் என்பதை முதல் அடி குறிப் பிடுகின்றது. இந்த வரியைக் காண்கிறபோது திருஞான சம்பந்தரது பதிகத்தில் காணப்படும் போகமார்த்த பூண் முலையாள் தன்ளுெடும் பாகம் ஆர்த்த பைங்கண் வேள் ளேற்றண்ணல் என்னும் வரிகள் நினைக்கு வருகின்றன. நம் ஐயா சைவ சமய பெரியார்களாகிய அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவர். இந்த உண்மையினைத் திருவருட்பா முழு வதிலும் நன்கு காணலாம். தனியாகவே இந்நால்வர்களைப் போற்றி வணங்கிய பாடல்களும் உண்டு. நம் ஐயா இந்நால் வர்களின் சொல்லையும் பொருளையும் தொடர்களையும் ஆங் காங்கே அப்படி அப்படியே எடுத்தாண்டுள்ளனர்.

ஒரு புலவன் தன் நூல் சிறப்படைய வேண்டுமானல், தமக்கு முன்னே இருந்த அறிஞர்களின் வாக்குகளேயும் கருத்துகளையும் தம் நூலில் எடுத்து ஆண்டு கொள்ள வேண்டுமென்பது இலக்கணத்தில் எடுத்து மொழியப்பட் டுள்ளது.