பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 105

. உள்ளும் புறமும் திறந்த மனமாக அருள்க!

இறைவா, தூய வெள்னேறுடையானே! என் மனம் நீ எழுந்தருளும் திருக்கோயிலாக விளங்க வேண்டும். இது என் ஆசை. ஆனால் என் ஆசை எளிதில் நிறைவேறாது போல் இருக்கிறதே.

இறைவா, என்மனம் தூய்மையாக இல்லை. வெண்மை யாக இல்லை. ஏராளமான செய்திகள் இரகசியம் என்ற பெயரில் அங்கு உள்ளன. அவைகளை மற்றவர் அறிய நான் கூறுவதில்லை. X

என்னுடைய வாழ்க்கையில் ஒளிவு, மறைவுகள் அதிகம். இதற்கு ஏதேதோ காரணம் சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொள்கின்றேன்.

இறைவா, நான் என்ன செய்ய? இங்குள்ள சூழ்நிலை யில் உண்மை சொன்னால் உலகம் பைத்தியக்காரன் என்ற பட்டம் கட்டிவிடும். வாழத் தெரியாதவன் என்று எள்ளி நகைக்கும். இது இன்று என்னுடைய நிலை, e

இறைவா, நியோ திறந்த மனத்துடன் வாழ்பவர் களையே நேசிக்கிறாய். விரும்பி ஏற்றுக் கொள்கிறாய். எனக்குத் தூய்மையான மனத்தினைத் தந்தருள் செய்க: உள்ளொன்றும், புறமொன்றும் இல்லாத திறந்த மனத்தினை அருள் செய்க!

என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல விளங்க அருள் செய்க கள்ளமற்ற திறந்த மனம். இன்பம் கழி இய சொற்கள்,மனம் திறந்த பேச்சு இவற்றை என் வாழ்க் கையின் நியதிகளாக ஏற்றுக்கொள்ள அருள் செய்த

இறைவா, திறந்த மனம் உனது அருட் கொடை. நீ . நேசிப்பது. இறைவா, சிறந்த மனத்தினை அருள்.

சங்க!