பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள இறைவா, அருள்க! இறைவா, மனத்துள் நின்று கருத்தையறிந்து முடிக் கும். தலைவா! துன்பத் தொடக்கே இல்லாத மனித சமுதாயத்தைக் காண வேண்டும். இது என் ஆற்றலை விஞ்சிய குறிக்கோளா? இல்லையே இறைவா!. என் ஆற்றலுக்கு ஏது எல்லை ? அளவு? என் ஆற்றல் எல்லையற்றது! அளவற்றது! என் குறிக்கோளை அடைய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். என்னால் முடியும்.- என் வாழ்க்கையில் விட முயற்சியே தேவை. . இறைவா, என்னிடம் முயற்சியே இல்லை. விடா . முயற்சி வேண்டும் என்கிறாய். போகாத ஊருக்கு வழி சொல்கிறாயா! இறைவா வேறுவழி இல்லையா? இல்லை. விடா முயற்சியே தேவை. ஒரு நாள் செய்து பல நாள் செய்யாது ஒழிதல் கூடாது. தொடர்ச்சி தேவை. நின் நின்று உழைத்தல் கூடா. தொடர்ந்து உழைக்க வேண்டும். . உழைப்பில் ஆற்றலைப் பெருக்கி வளர்க்கும் உயரிய குறிக்கோள் தேவை. அக் குறிகோளில் ஆவேசம் தேவை. அறிவு, உணர்வுகளில் அந்த உயரிய குறிக்கோள்கள் அதிட்டித்து நின்று இயக்குதல் வேண்டும்! - - - - இறைவா, நான் ஒரு சுடரே! ஆனால் தூண்டினால் எரியும் சுடர் நான். எந்த விளக்குக்கும் தூண்டுதல் தேவை. இறைவா , என்னைத் தூண்டிவிடு, நான் ஆற்றல் மீக்குடையவனாக வாழ்கின்றேன்! என் ஆற்றல் எரியும் சுடர்! தூண்டி விட்டால் பரிணமித்துச் செயல்படும். - இறைவா, என் உணர்வு நிலையில் இருக்கும் சமுதர் யத்தை அமைக்க முதல் தேவை என்.. ஆற்றல்... என் ஆற்றலை நான் பெருக்கிக் கொள்ள இறைவா, அருள் செய்க.