பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of it, திருவருட் சிந்தனை

அன்பு செய்யும் வரம் தத்தருள்க!

இறைவா! பல்லுயிராய்ப் பரந்து நிற்கின்ற எம்தலைவா! நின்னருள்பெறும் உயிர்க்குலத்திற்கு யாதொருதுன்பமும் என்னால் நிகழக் கூடாது.

இறைவா, எனது பொறிகளில் கொல்லாமை, துன் புறுத்த மை ஆகிய நோன்புகளை மேற்கொண்டொழு கும்படி அருள் செய்க! யாதோர் உயிருக்கும் என் வாழ்க்கை முறையில் - மனத்தால், வாக்கால், உடலால்-நான் துன்பம் செய்யக்கூடாது கொல்லாமையே என்வாழ்க்கை யாக வேண்டும்.

இறைவா, இம்சையால் உலகம் வளர்வதில்லை. எனக்கு எனக்கு அகிம்சை தேவை. எனது பகைவனுக்கும் நான் அன்பு காட்ட வேண்டும்! யாதோர் உயிருக்கும் மனத் தினால் கூடத் துன்பம் கருதுதல் கூடாது. இறைவா, அருள் செய்க. .

கொல்லாமை நோன்பால் - அகிம்சையால் அரசி யலையே நிகழ்த்திப் பெருமை பெற்றவர் அண்ணல் காந் தியடிகள். நான் என் சொந்த வாழ்வில் அகிம்சையைக் கடைப்பிடிக்க இயலாதா? இறைவா, அருள் செய்க

என் மனம் யார் மாட்டும் அன்பு செய்யும் வரத்தினைத் தா. வாழ்த்தியே பேசும் வாயினைத் தா. அருள் சுரக்கும் த்ெஞ்சினையே தந்தருள் செய்க! அன்பே. அன்பே என்று அரற்றி அழும் அருள் நலம் சார்ந்த நன்னெஞ்சத்தை தந்தருள்க! .

அகிம்சையே என் வாழ்க்கையில் அமைவதாக கொல் லமை அறம்,குவலயம் முழுவதும் குடி கொள்வதாக உலகு, கொலைகளிலிருந்து விடுதலை பெறுக எங்கும் சமாதானம்சகவாழ்வு தழைப்பதாக!