பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பார்வாழத் திருவிதிப் பணி செய்தார்’ என எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார்.

ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க வேண்டியதன் இன்றியமையாமையைத் தெரிவித்து, அண்மையில் அறநிலையத் துறையின் சார்பில் திருக்கோயில் தூய்மைப் பராமரிப்புப் பணி, மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தொடங்கி வைக்கப் பெற்றது.

பதினைந்து சமூக அம்ைப்பைச் சார்ந்த அன்பர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துாய்மை பராமரிப்புக்கும், பொறுப்பேற்றுக்கொண்டு, செயல்படத் துவங்கியுள்ள ர்கள்.

அனைத்து ஆலயங்களிலும் - சமூக நல அமைப்பு களைக் கொண்டு, ஆலயங்களின் தூய்மையைப் பராமரிக்க, அறநிலையத் துறை எண் ணி வருகிறது.

அரசின் முயற்சிகளுக்கு, ஆக்கமும், ஊக்சமும் தரு வதைப் போல அடிகளார், ஆலயத்துாய்மைப் பராமரிப்பு யாரோ சிலரின் கடமையல்ல ஆலயத்துாய்மைப்பணிகள் சமுதாயத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் கடமை யென் பதை இந்நூலில் தெளிவு படுத்தியிருப்பதைப் பாராட்டுகிறேன்.

தமிழ் அருச்சனையின் ஏற்றம் பற்றியும் பல பிரார்த்த னைகள் விளக்குகின்றன. இறைவன் படிக்காசு கொடுத்து பைந்தமிழைக் கேட்ட ன்; பண் சுமத்த பாடல்களைப் பெறுவதற்காக வைகை ஆற்றங்கரையில் மண் சுமத்தான் , சுந்தரரின் செந்தமிழுக்காக திருவாரூர்த் தெருக்களில் நடத்தான்.

ஆகவ்ே இறைவன் தமிழையே விரும்புகின்றான், இல்லை, இல்லை இறைவன் தமிழாகவே இலங்குகின்றான்