பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருவருட் சிந்தனை

இறைவா, ஆசைகளற்ற வாழ்க்கையை அருள்செய்க

இறைவா, உடல் அரிப்புப் போன்றது அவச ஆசை: “அரிப்புக்குச் சொறிந்தால் முதலில் இதம்! அரிப்பு நிற்குமா? “நிற்காது. தொடர்ந்து சொறிந்தால் புண்! ஆம், இறைவா! அதுபோல ஆசையை நிறைவேற்ற முயன்றால் ஆசை வளரும்:

மேலும் மேலும் வளரும், வெள்ளம் பேல் புதிய புதிய ஆசைகள் இந்த ஆசைகளை நிறைவேற்ற முயன்றால் உடல் வகுத்தம்: அவமானம் துன்பம்! இப்படித்தான் போகும்! -

இறைவா, ஆசைகள் இல்லாத அருள் வாழ்வை உன் புனிடம் யாசிக்கிறேன். என்னுடைய நல் வாழ்க்கைக்குப் பகைய கிய ஆசை வேண்டாம். சின்னதில் கூட ஆன்ச வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

துரும்பைக் கூட நான் ஆசைப்பட்டு அடையக் r . இறைவா! ஏன் உன்னிடத்தில்கூட எனக்கு ஆசை கூடிாது. ஆம், இறைவா! ஆசையற்ற வாழ்வைக் கொடு. • , ,

அன்பு செய்ய ஆசைப்படுகிறேன்! நினக்கு ஆட்செய்ய ஆசைப்படுகிறேன்! ஆசையை ஒழிக்க வேறொரு ஆசை தேவைப்படுகிறது. ஆனால், அவல ஆசைகள் வேண்டாம். இறைவன் , அருள் செய்க: - .

ஆசைகளற்ற அருள் வாழ்க்கையை, பாசங்கள் நீங்கிய புகழ் வாழ்க்கையை, அன்பே நிறைந்து வழியும் புண்ணிய வாழ்க்கையை அருள் செய்க. இறைவா, அருள் செய்க!