பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1

எனக் கூறி, ‘இறைவா! எங்கள் தவறை மன்னித்து அருள் நாங்கள் நல்ல தமிழில் வழிபாடு செய்கிறோம்!” என்று பிரார்த்திப்பதாக அடிகளார் அமைத்திருப்பது பாராட்டுக் குரியதாகும்.

இவை போன்ற பாராட்டுக்குரிய எத்தனையோ சிறந்த கருத்துக்கள் பிரார்த்தனைகளாக, இந் நூலில் திகழ்கின்றன. ‘வாழையைப் போல சமுதாயத்திற்கு முழுதும் பயன்பட்டு வாழ வேண்டும்; தென்னையைப் போல் நன்றியை இளநீராகக் கொடுக்க வேண்டும். எருதினைப் போல், உடல் நோவினைப் பாராது உழைக்க வேண்டும். நிலத்தைப் போல் கொத்தினாலும் வெட்டினாலும் நன்மையே செய்ய வேண்டும்’ என்பதாக வரும் பல பிரார்த் தனைகள் நல்ல பண்புகளை ஊட்ட வல்லனவாய் அமைந் ‘துள்ளன.

அடிகள் ஓரிடத்தில் பசுவைப் பற்றிச்சொல்லும் போது பசு தன் வாழ்நாளில் 24,690 பேருக்கு ஒரு வேளைக்குத் தேவையான பாலைப் பொழிந்து தருவதைக் கணக்கிட்டுக் காட்டுகின்றார்.

கணக்கு, தமக்குப்பிடிக்காத பாடம்தான் என்று கூறும் அடிகளார், கணக்கின் முறைகளை உவமைப்படுத்தி: வாழ்க்கையையும் ஒரு கணக்காக காட்டுவதும், வாழ்க்கை யாகிய கணிக்கில் அறிவைக் கூட்ட வேண்டும்; கெட்டவை களைக் கழிக்க வேண்டும்; ஆற்றல். செல்வம், அன்பு போன்ற நல்லவற்றைப் பெருக்க வேண்டும்; வையம் உண்ண வகுத்துக் கொடுத்து வாழ வேண்டும்.’’ என்றெல் சீலாம் கூறி, வாழ வழிகாட்டும் பகுதிகள் மிகச்சிறப்பாக

அமைந்திருக்கின்றன.

தனக்காக மட்டும் வாழ்வது விலங்கின் தன்மை

அபிறர்க்காக வாழ்வதே மனித தருமம் என்பதை ‘திருவருட் சித்தனின் மூலமாக எடுத்துக் காட்டும்