பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 129

warensrw”

உழைத்தலே தவமாகும் உத்தம வாழ்வை அருள்க!

இறைவா, பல்லுாழிக் காலமாக ஐந்தொழில் இயற்றிடும் தலைவா! நாளும் ஓயாது உழைத்திட வேண்டும். படைப் பாற்றல் மிக்க தொழில் செய்ய வேண்டும். இறைவr, அருள் செய்க!

இறைவா, எப்போதும் உழைப்பிற்குரிய விழிப்பு நிலை யில் வாழ்ந்திடுதல் வேண்டும்! உழைப்பிற்குரிய ஆயத்த் நிலையில் வாழ்தலே வெற்றிகளைக் குவிக்கும்:

ஊக்கம் உடையோனாக வாழ்ந்தாலே போதும். எல்லாப் பொருள்களையும் நுகரலாம்:

2-5- -- ... 5, வேற்றுமை பாராட்டாமல் உழைக்கும் உளப்பாங்கு தேவை உடலுழைப்பே உயர் வுடையது என்றருள் செய்யும் இறைவா. உழைத்தல் போன்று உழைத்தலே உழைப்பு.

கழனியில் சேறு ஆவதற்கு மாடு திரும்பத் திரும்ப உழைத்தலைப் போல உழைத்திடும் மனப்பாங்கினை அருள் செய்! இறைவா, உழைத்து உண்ணும் ஒழுக்கத்தினை அருள் செய்க: - • . -

உளமார உழைத்தலே யோகமாகும். உடல் வருந்த உழைத்தலே தவமாகும்! உழைப்பில் மகிழும் வாழ்க்கை யைத் தா! • * ,

இறைவா, காலங் காட்டும் கடிகாரத்தைப் போல, சுழன்று சுழன்று சுறுசுறுப்பாக உழைக்கும் வரத்தினைத் தந்திடுக.

உழைப்பால் மண்ணகத்தை விண்ணகம் ஆக்கிடும் ஆற்றலைத் தந்தருள் செய்க!

தி-9