பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 85

ஒன்றேகுலம்! உயிர்க்குலமாக ஒழுக்கத்தில் நிறுத்துக!

DCMMMASAC AAAA AAAA SAAAAA AAAA SAAAAA AAAA AAAA SAAAAA SAAAAA

இறைவா, எந்நாட்டவர்க்கும் இறைவா! நான் மிகச் சின்னஞ்சிறு வட்டத்தின் உள்ளிருந்து வெளியே வர முடியா மல் தவிக்கின்றேன்.

குடை ராட்டினத்தில் ஏறிச் சுற்றும் குழந்தைகளைப் போல, என் நிலை பரித பமாக இருக்கிறது.

இறைவா, நான், சிறு வட்டத்திலிருந்து வெளியே வர அருள் பாலித்திடுக! ஆம், இறைவா மனிதகுலம் என்ற பெரிய வட்டமே எனது அன்புக்கு இலக்காக அமைய வேண்டும்.

சாதி, குலம், கோத்திரம், இனம், மதம் என்ற சின்னச் சின்ன வட்டங்களுக்கு உள்ளேயே சுழலுகிறேன். கிணற்றுத் தவளைபோல, கிணறே கடல் என்று கருதி ஆசைப்படு கிறேன். அமைதி கொள்கிறேன்! இறைவா, மானிடனாகிய எனக்கு ஏன் இந்த வட்டங்கள்!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று வாழ்ந்திட அருள் செய்க! ‘ஒன்றே குலம், அதுவே உயிர்க்குலம்’ என்ற மேலான ஒழுக்கத்தில் என்னை நிறுத்துக,

ஆன்மநேய ஒருமைப்பாடு காணும் தவத்தினைப் பயில அருள் செய்க! இறைவா எல்லா உலகமும் ஆனாய் நீயே’ என்ற உண்மையை நான் உணர்ந்து உலகந்தழுவிய ஒழுக் கத்தில் நின்று வாழ்ந்திட அருள் செய்க! . . . . . . . . . .