பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டுரை

முனைவர், தருமையாதீனப் புலவர் கு சுந்தரமூர்த்தி எம். ஏ., பி. எச் டி., முதல்வர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்த ள்.

காலம் என்பது அருவப் பொருள். அது உலகியல் நிகழ் வதற்கு ஏதுவாகக் கதிரவன் முதலிய அளவைகளால் கூறு பட்டு நாள், திங்கள், ஆண்டு என கணக்கிடப்பட்டு காட்சி அளிக்கின்றது. அக்காட்சி கண்ணுக்கு இனிமை தரினும், கருத்திற்கு இனிமை தருவதில்லை. காரணம் அவ்வாறு கழியும் நாள், திங்கள், ஆண்டுகளெல்லாம் உயிரினங் களின் வாழ்நாளை அறுக்கும் வாளாக அமைந்து விடுகின்றன. - .

ஆதலால்தான், அறிஞர்களும் அருளாளர்களும் இளமை யாக்கை, செல்வம், பொருள் அனைத்தும் நிலையாமை யுடையவை என அறிவுறுத்தினர். - . . நிலையாமையை உணர்வதன் வாயிலாக நிலையுடை வனவற்றை நாடவேண்டும் என்றும் வற்புறுத்தினர். அவ் வாறு வற்புறுத்திய அறிவுப் பெட்டகமே நமக்குக் கிடைத் திருக்கும் நீதி நூல்களும் அருள் நூல்களுமாகும்.

இவ்வாறு அவ்வப் போதெல்லாம் சான்றோர்கள் அறி வுறுத்தியிருப்பினும் மனித இனம் அவற்றை மறந்தும் துறந்துமே பெரிதும் வாழ்கின்றது. o . ஆதலால்தான் மெய்யுணர்வு உடைய சான்றோர்கள், அருளாளர்கள் மேன் மேலும் அரிய சிந்தனைகளை ஊட்ட வேண்டியவர்களா யினர்.

இவ்வாறாய அரிய சிந்தனைத் தேக்கமே. இந் நூலாக் மலர்ந்துள்ளது. ஓர் ஆண்டிற்குரிய 868 நாட்களிலும் நாளும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுமாறு கொள்ளத் தக்க சிந்தனைகளைத் தந்தருள வேண்டுமென இறைவனை நோக்கி விண்ணப்பிக்கப் பெற்றுள்ளது.