பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் #55

அன்பே உயிராக வாழும் வகையினை கற்றுத் தருக!

SSASAS A SAS SSAS SSASAS SS SAAAAAeeAAA AAAASASASS ---------

இறைவா, அன்பின் வலையில் அகப்படும் அரும் பொருளே உள்ளவாறு அன்பு செய்ய எனக்குக் கற்றுக் கொடு. ஆற்றல் மிக்க அன்பினை நான் பெற அருள் செய்க!

எல்லா உயிர்களையும் ஈர்த்துப் பிணிக்கும் இணையற்ற அன்பினை யான் பெற அருள் செய்க. இந்த மண்ணகத்தை விண்ணகமாக்கும் தூய அ ன் ைப அருள்பாவித்திடுக. அன்பிலே கரைந்து ஒருலகமாகும் உன்னதப் பேற்றினை அருள் செய்க.

மானுடத்தை வாழ்விக்கும் வளமார்ந்த அன்பினை அளித் தருள்க. ஈர நெஞ்சினை நயந்தருள் செய்க. ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்யும் வாழ்க்கையினை அருள் செய்க. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்யும் அன்பினை அளித்தருள்க!

பழகிய நட்பைத் தலைநாள் நட்பே போல வளர்த்துக் கொள்ள வழி காட்டுக! மற்றவர் கீழ்மையைத் தாங்கிக் கொள்ளும் அயரா அன்பினை அருள் செய்க! அருளினை ஈன்றருளும் அன்பினை அருள் செய்க!

இறைவா, தின் திருவடிக்குத் தொழும்பாய் ஆட்படும், அசைவில் அன்பினை அருள் செய்க. என்னுடைய அன்பே: ஆண்டவா! அனைத்துலகமும் அன்பில் இயங்கட்டும்!

அன்பே உயிராக வாழ்ந்திடும் வகையினைக் கற்றுத் தந்திடுக. வையகம் சிறந்திடும் அன்பு, யாண்டும் முகிழ்த் திடுக. முன்னே வந்தருள் செய்க. அன்பே சிலுமாய்ச் சிந்தித்து வாழ்ந்திட அருள் செய்க!