பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 - திருவருட் சிந்தனை

LLLAAAASLLLAAAASDSLggS S ASAAAA AAAAMMMMAMBMAMMSggCM AMMSgS

இறைவா, என்னைப் புதிய மனிதனாக்குக!

இறைவா, என்ன சிரிக்கிறாய்? நான் நகைப்பிற்கிட மாணவனாகி விட்டால் உனக்குப் பெருமையா? அது எப்படி இறைவா?

ஏன் என்னை இப்படி அவலப்படுத்துகிறாய்? எனக் கென்ன வாய் இல்லையா? பேசத் தெரியாதா? தர்க்கம் செய்யத் தெரியாதா?

இறைவா, நான் பேசியே கெட்டேன். உலகத்தின் இயக்கம் செயலாலேதான்! என்னை ஆண்டருள் செய்யும் பெருமானே! -

என் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும், உறுப்பிற் குரிய உயர்பணிகளைச் செய்யத்தக்க வழியில் பயிற்சி கொடு. r

என் கால்கள் நின் திருக்கோயில் வலம் வரட்டும் து கால்கள் வஞ்சிக்கப்பட்டு வாழ்விழந்தோர் வாழ்வு நோக்கி நடை பயிலட்டும். . .

வயிறு, அற்புதமான உறுப்பு ஓயாது உழைப்பது. உழைப்பின் பயனை உடல் முழுதுக்கும் தருவது, தூய்மை தழுவியது. -* . . . . .

நெஞ்சு மனித நீதியில் நிலைத்து நிற்கட்டும். வாய் நின் புகழ் பேசட்டும். நின் புகழனைய வாய்மைக்கு வழக் காடட்டும். இறைவா, இந்தப்படி அருள்செய்! புதிய மனிதனாக்குக!

இறைவா, என்னைப் புதிய மனிதனாக்கி அருள்க! தெஞ்சம் நீதியில் நிலைத்திட அருள் செய்த -