பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& திருவருட் சிந்தனை

என் மனோசக்தி தொழிற்பட அருள் செய்க!

இறைவா, திணைப்பவர் மனம் கோயிலாக கொண்ட வனே! போற்றி! போற்றி! இறைவா, நான் யார்? என் உயிர் எது? இறைவா, என் உயிர், உடல் முழுதும் பரவி நீக்கமற நிறைந்து நிதிகிறது.

இறைவா, என் உச்சந்தலையில் உள்ள உரோமத்தில் இருந்து கால் நுனியில் உள்ள நகம் வரையில் எங்கணும் என் உயிர் இருக்கிறது; ஆயினும் உயிரின் இயக்கம் மனத்தினால் ஆகும்.

‘மனம் உண்டேல் வழியுண்டு’ என்பதன் தத்துவப் பொருள் விளக்கம் என்ன? மனமிருந்தால் அறிவும் இயங்கும் இறைவா, என் மனத்தை மீட்டுத் தா! -

இறைவா, என் மனத்தில் நீ எழுந்தருளியிருந்து கொண்டு என் மனத்தைப் புறம் போகவிடாமல் எனக்குத் துணையாக இருக்கும்படி அருள் செய்க!

என் மனம் என்வசம் இருக்கும்படி அருள் செய்க! என் மனம் அட்டமாசித்தியும் இயற்றிடும் ஆற்றலைப் பெற்று விளங்க வேண்டும்:

இறைவா, மனம் போல வாழ்வு என் வாழ்வும் மனமும் இசைந்தவை. நான் வாழ்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட அருள் செய்க!

மனமது செம்மையாகிப் புதுவாழ்வு பெற்றிட அருள் செய்க என்மனம்: ஆம், அதிசக்தி வா ய்ந்தது. என் மனே சக்தி தொழில்பட அருள் செய்க! -