பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 75

இறைவா, சாதி. மதத்திலிருந்து விடுதலை செய்க

இறைவா! எட்டினோடு இரண்டும், அ, உ, ம் என்ற ஒம் எனும பிரணவ மந்த்ரத்தை அறியாத என்னை பட்டி மன்றம் ஏற்றினை! நின் அருட் செய்லுக்குப் பல நூறாயிரம் போற்றிகள்!

ஆனால் இறைவா, நின் செயல் நற்பயனை விளைத்து வருகிறதா? கூர்ந்து நோக்கின் பயன் நன்றாக இல்லை.

இறைவா, பொய்-மெய் துணிவே வாழ்க்கையின் நோக்கம்; பிறவியின் பயன். ஆனால், இன்றோ பெரும் பான்மையான விவாதங்கள் பொய்-மெய் துணிவதற்காக இல்லை.

விவாதம் ஒரு பொழுதுபோக்கு. பலர் திண்ணையில் உட்கார்ந்து விவாதிப்பதிலேயே பொழுதைக் கழிக்கின்றனர்.

பல சமயங்களில் இந்த விவாதம் சூடேறி விபரிதமாகி விடுகிறது. பகைமூண்டு விடுகிறது. பி.ண ககுகளும் தேடி ன்றி விடுகின்றன. வி. தத்தால் இந்த உலகில் விளைநத தீமைக்கு அளவே இல்லை. இன்றும் அந்தச் தீமைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்றும் மத விவாதங்கள், மதச் சண்டைகளாக மாறி மதத்திற்கு தேர் எதிரான பலனைத் தந்து வருகின்றன:

இறைவன், நான் உன்னை நம்புகிறேன். உன்னைப் போற்றுகின்றேன்! உன் வழியில்-அறவழியில் வாழ்கின் றேன! உன்னுடைய இந்தப் பரந்த உலகத்திற்குத் தொண்டு செய்கின்றேன்! இது போதாதா?

இறைவா, எனக்கு எதற்கு மதம், சாத்திரக் குப்பைகள், சடங்குகள்?

சாதி ஆசாரங்கள் எனும் சிறுபிள்ளை விளையாட்டுக் களிலிருந்து விடுதலை செய்க: “நீயுண்டு நானுண்டு’ என்து வாழ்ந்திட அகுள் செய்க: இறைவா, அருள் செய்க!