பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

உலக மக்கள் எல்லா நெறி முறைகளிலும் சிறந் தோங்க, தமது நினைப்பு உழைப்பு, முனைப்பு, அன்பு, அருள், ஆற்றலாலும், பயனிட்டி அருளும், அருள் நெறித் தந்தை தவத்திரு. அடிகளார் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

நாம் தவத்திரு அடிகளாருக்கு என்னகைம்மாறு செய்யக் கூடும்? நம் வாழ்க்கையைச் செம்மையாக்கி மகிழ்விப்பதே சாந்துணையும் அடிகளாருக்கு நாம் செய்யும் கைம்மாறாகும்.

மரண மிலாப் பேரின் வாழ்க்கைக்கு உதவும் வகை யில், பிறவிநோய் அகற்றும் மருத்துவ மாமுனிவராக இந் நூலை ஆக்கியருளும் தவத்திரு அடிகளார் அவர்களின் திருமுன், மனம், மெய், மொழிகளால் வணங்கி மகிழ்கின் றோம்.

முத்தான அணிந்துரை அளித்து மகிழ்விக்கும் அறச் சிந்தனைச் செயல்மிகு முன்னை அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு இராம. வீரப்பன் அவர்கட்கு எங்கள் இதயம் கனிந்த நன்றி. -

உவந்து மதிப்புரை நல்கிய தத்துவப் பேராசிரியர் டாக்டர் வை. இரத்தினசபாபதி அவர்கட்கும், திருப்பனந் தாள் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர், முனைவர் கு. சுந்தரமூர்த்தி அவர்க்ட்கும் இதய நன்றி.

இடையறாப் பணிகளால் உடல் நலிவுற்ற நிலையிலும் நூல் சிறப்புற உதவிய உழுவலன்பு நண்பர், ஆதீனக் கவிஞர் மரு. பரமகுரு அவர்கட்கும் செந்தமிழ்ப் புலவர்கள் வி. செ. கந்தசாமி, ச. லட்சுழிகாந்தன்.அவர்கட்கும் எங்கள் உளம் கனிந்த நன்றி. - >

மாந்த்ருலகம் இவ் இனி நூலைப் படித்து, பயன் பெற்று மகிழ்ந்திட கலைவாணியின் திருவருளை நாளும் வேண்டுகிறேம். . . . . . தியாகராயநகர் சீனி. திருநாவுக்கரசு சென்னை 17 பதிப்பாசிரியர்