பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பலரும் போற்றும் பொலிவு வாழ்க்கை அருள்க:

இறைவா, நின்னைக் கண்டும் கண்டிலேன். என்ன கண் மாயமே. நான் காண்பன், உறவு கொள்வன அனைத் தும் மெல்ல மெல்லத்தான் கரைந்தொழிகின்றன. திடீர் என்று எதுவும் நடந்து விடுவதில்லை! -

நட்பு அரும்பி மெல்ல மெல்ல வளர்கிறது. அங்ாவன மில்லாது திடீர் என்று தோன்றும் நட்பு, திடீர் என்றே போய் விடுகிறது நட்பில் பிரிவு கூட மெல்ல மெல்லத் தள் என் வற்றிப் பிரிந்து விடுகிறது. * -

ஆதலால் உறவில், நட்பில் நெருக்கத்தையும் பரா மரித்துக் கொண்டு வரவேண்டும். இடைவெளி ஏற்பட்டால் ஆபத்துதான். பகையே இல்லாதிருந்தாலும், திரும்பப் போய் சேர நாணம், கூச்சம் எல்லாம் வந்து விடும்.

இறைவா, நான் பழகிய ஒவ்வொருவரிடத்தும் தலை நாள் பழக்கம் போலவே பழக விரும்புகிறேன். ஆனால் என்னால் இயலவில்லை. மன்னித்துக் கொள். . . .

நான் இனி எல்லாரிடமும் கொண்டுள்ள உறவுகளைப் பராமரித்துப் பேணுகிறேன். அடிக்கடி சந்திக்கிறேன். உறவு கலந்து உண்டு பழகி மகிழ்வூட்டுகிறேன். மகிழ்கிறேன்.

மற்றவர்கள் மனநிறைவு கொள்ளும் அளவு, அவர்களை பாராட்டுகிறேன். அடிக்கடி சந்திக்க வேண்டிய அவசிய் மில்லையானாலும் சந்திக்கிறேன்.

பழகியோரைக் காண்பதும், உறவுகளை வளர்த்துக் கொள்வதும் கூட வாழ்க்கையில் ஒரு நீங்காக் கடமை இறைவா, இவ்வகையே வாழ்ந்திட அருள் செய்க!

என் இதயத்தில் வற்றாத, அன்பு ஊன்ற்று வேண்டும்: அருள் செய்க. என் இதயத்தில் நம்பிக்கை என்ற் ஒளி விளக்கு அணையர்மல் எரிய வேண்டும். பலரும் போற்ற்ம்’ பொலிவுடைய வாழ்க்கையை அருள்க!