பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 * - . திருவரும் சிந்தன்ை

எய்ப்பினில் வைப்க்க இருந்து வாழ்வித்தருள் செய்க

இறைவா, நரகொடு சுவர்க்கம் தானிலம் புகினும் புக்கு நின்றருளும் என் தலைவா! நின் திருவடிகள் போற்றி! போற்றி!! : - . . . .

இறைவா, நீ என் வாழ்க்கைக்குத் துணை! என் மனத்துள் கருத்துருக் கொண்டருள்வாய்! இது உண்மை இறைவா. ஆனால், எனக்கு நாணம் மேலிடுகிறது.

என் தலைவனே! நான் ஒரு அறிவு ஜீவி. நானும் செயல்கள் செய்வேன். எனக்கும் பொறி புலன்கள், அறிவுக் கருவிகள், செயற்பாட்டுக்குரிய கருவிகள் உள்ளன. நான் என்ன சோற்றுப் பாவையா? நான் உண்டு உடுத்து. மாள்வதா. - . . . . ; ‘. . . .”

பல நூறுகோடி உயிர்களைப் பயந்த வண்ணம் கசக்கும் கடம் பூண்டநின் உழைப்பிலேயேநான் வாழ்வதா? ஐயகோ, வெட்கமாக இருக்கிறது. என்னைப் ப்ொறுத்துக் கொள்

நான் என்ன செய்ய வேண்டும் என்று எண்ணுகின் றேன்! உன்னிடமும் என்னைப் பனிகொள்ளும் வகை கேட்டறிந்து கொள்கிறேன்: நான் சிந்திக்கிறேன். நான் செய்கிறேன்.நான் உழைக்கிறேன். -

இறைவா, நான் எனக்காகவும் இந்தப் பரந்த மானுட சாதிக்காகவும் உழைக்கிறேன். உழைத்தே உண்பது என்று உறுதி கெள்ளகிறேன். தின் திருவுள்ம் மகிழப் பல அற்புதப் படைப்புகளைச் செய்கிறேன்.

இறைவா, ஒரே ஒரு வேண்டுகோள் என்ன இருந் F 9 5Tr சேர்ந்தால்-எய்த்துக்களைத்துப் போன்ால் ‘ நீ வந்து துணை செய்! . • *

இறைவா நீ எனக்கு வழக்கமாக நுகரும் நிதிபோல் அல்லாது சேமநிதியாக இருந்தருள் செய்க! நீ எனக்கு எய்ப்பினில் வைப்பாக இருந்து வாழ்வித்தருள் செய்க: