பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவருட் சிந்தனை

என்மீது அதிகாரம் செலுத்தி, சுதந்தரம் அருள்க!

இறைவா, பரிபூரண சுதந்தரம் உடையவனே! எல்லாவற்றையும் வைத்து வாங்கும் அதிகாரமுடைய ஊழி முதல்வனே! போற்றி! போற்றி! என் வாழ்க்கையில் சுதந்தரத்தின் சுவை இல்லவே இல்லை!

‘ஆடுவோம், பள்ளுப்பாடுவோம்! ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்’ என்று. ஆனால், சுதந்தரம் என்பது இன்னது என்று எனக்கு இதுவரையில் தெரி யாது! சத்தியமாகத் தெரியாது மன்னித்துக் கொள்!

சுதந்தரத்தின் அனுபவம் இல்லை. அதிகாரச் சுவையையாவது அனுபவித்தது உண்டா?’ என்று கேட்கிறாய் இறைவா! ஐயகே அதிகாரமா? அப்படி யென்றால் என்ன?

இறைவா, அதிகாரமும் எனக்குத் தெரியாது. ஆனால், இறைவா, சில சமயங்களில் சில உத்தரவுகள் போடுவேன்! சிலர் மீது கோபிப்பேன்! இதற்கெல்லாம் அப்படியொன்றும் விளைவுகள் இருந்து விடுவதில்லை.

இறைவன், ஒருவன் முழு அதிகாரம் உடையனவாக இருந்தால் முழுச்சுதந்தரத்தை அனுபவிப்பான்! இறைவா, நன்றருளிச் செய்தனை முழு அதிகாரம்!

என் பொறிகள், புலன்கள், பழைய பழக்கங்கள், மரபுகள், சமூக நிர்பந்தங்கள் ஆகியவற்றிலிருந்து என் ஆன்மா முழுச் சுதந்தரத்தை அடைதல் வேண்டும்.

இந்த முழுச்சுதந்தரம் எனக்குக் கிடைத்த பிறகு எனக்கு முழு அதிகாரம் கிடைக்கும் முழு அதிகாரமும் முழுச் சுதந்தரமும் இணை: ஒன்றை யொன்று பிரிக்க இயலாதவை. அப்படியா , இறைவா!

தான் இன்றுமுதல் என் வாழ்க்கையில் அனுசரிக்க முயலுகின்றேன்! நான் முழுச்சுதந்தரம் வழங்குவேன்! இறைவா, அருள் செய்க!