பக்கம்:திருவருட் சிந்தனை 2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ திருவருட் சிந்தனை

அன்பெனும் கசிவு கண்டு காட்டி உதவி அருள்க!

இறைவ: , கல்லைப்பிசைந்து கனியாக்கும் வல்லாளன்’ என்று உன்னைப்புகழ்வது பொருந்துமா? இறைவா, என் மனம் கல்ல. க இருக்கிறதே! இறைவா, என்மனம் கல்லாக இருந்தால் பரவாயில்லை! கல் வலிமையான பொருள். நின் திருக்கோயில் கட்டுமானத்திற்குக் கல்தானே பயன்படுகிறது!

ஏன் இறைவா? நின்னைக் காண-உறவு கொள்ள உன்னையே கல்லில் தானே சிலையாக வடித்துள்ளோம். இறைவன் , என் மனம் இப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்படுவதில்லையே. -

இறைவா, கல்-அதன் நிலையில் பிடிவாதமாக இருப் பதில்லையே. அது பயன்கொள்வார் விருப்பத்திற்கு ஏற்ப வாயிற்படியிலிருந்து உனக்குச் சிலை வடிக்கும் வரை பயன் படுகிறது.

என்னுள் ஏதுமாற்றம்? என்னைப் பயன்படுத்துவோர் யார்? எல்லாம்நானே! எல்லாம் எனக்கே இறைவா, இத் தகைய கல்மனத்தை நெகிழச் செய்வாயா? அன்பெனும் கசிவு கண்டு காட்டி உதவி செய்க!

இறைவா, நான் அன்பினால் அரற்றி அழவேண்டும். உலகமே என் குடும்பம் ஆக வேண்டும். இறைவா, அருள் செய்க: தன்னலம் மறந்து அனைத்துயிர் நலம் நாடித் தொண்டு செய்ய அருள் செய்க!