பக்கம்:திருவருட் பயன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



81

வஞ்சத்தலைமையாவது, தாம் ஒன்றிற்குங் கருத்தா அல்லவாயிருக்கவும், யான் எனது என்று அகங்கரித்தல்.

விளக்கம்: ஆன்மாக்கள் தமக்கு ஆதாரமாயுள்ள அருளை அறியாதிருப்பதற்கு அவை ஐம்பொறிகளோடு கூடி வஞ்சிக்கப்பட்டிருத்தலே காரணம் என்கின்றது.

வெள்ளத்துள் நின்று நாவற்றி (இருத்தலும்) எங்கும் விடிந்து இருள் (ஆதலும்) போன்று, கள்ளத்தலேவர் கடன் ஆம் என முடிக்க. கள்ளத்தலைவர்-வஞ்சிக்கும் இந்திரியங் களுடனே கூடிய ஆன்மாக்கள்.

மார்பளவு தண்ணீரிலே போகிறவன் தனக்குத் தண்ணீர் வேட்கை இருக்கவும் மற்றொன்றிற் கருத்துடையனாய்ச் செல்லுங்கால் அவனால் அத்தண்ணீரை அள்ளிப்பருக வாராதது போலவும், பொழுது புலர்ந்து எவ்விடத்திலும் ஞாயிற்றின் ஒளிவீசவும் பிறவிக்குருடனுக்கு எல்லாம் இருளாய்த்தோன்றுவது போலவும் எங்கும் திருவருள் பிரகாசித்திருக்கவும் வஞ்சனையைச் செய்யும் இந்திரியங்களுடனே கூடிய ஆன்மாக்களுக்கு அதன் உண்மை புலப்படத் தோன்றுதல் இல்லை என்பதாம்.

இக்குறள் வெண்பா,

 "வெள்ளத்துள் நாவற்றியாங்குன் னருள் பெற்றுக்
                                      துன்பத்தினின்றும்
  விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்"  (நீத்தல்விண்ணப்பம் 14)

என வரும் திருவாசகச் செழும்பாடற் பொருளை அடியொற்றி அமைந்திருந்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

இவ்வாறு தமக்கு ஆதாரமாய் நின்று அறியாமை இருள் நீக்கி ஒளிவழங்கும் திருவருளை உயிர்கள் இதுகாறும் அறியா திருந்தது எப்படி? என வினவிய மாணாக்கர்க்கு, அதனை