பக்கம்:திருவருட் பயன்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



84

தமக்கு ஆதாரமாகிய திருவருளை மறந்து புறத்தே தாவிச் செல்லுதலாகிய மனத்தின் விரைவு அடங்கப்பெறின், திருவருளுண்மையினைத் தெளிந்து இன்புறுதல் கூடும் என்றவாறு.

அருளையே ஆதாரமாகக்கொண்டு வாழும் ஆன்மாக்கள் தமக்கு ஆதாரமாவது அருளே என்பதனைத் தம் மனத்தின் வேகந்தணிந்தாலன்றி அறிதல் இயலாதோ? என வினவிய மாணாக்கர்க்குப் பரப்பு அடங்கி அத்திருவருளைச் சிந்தையில் இடைவிடாது நினைத்தலே உயிர்கள் பெறுதற்குரிய வீடு பேற்றுக்குச் சாதனமாம் என அறிவுறுத்துவது அடுத்து வரும் குறட்பாவாகும்.

         40. இற்றை வரையியைந்தும் ஏதும் பழக்கமிலா
             வெற்றுயிர்க்கு வீடு மிகை.

இ~ள்: அனாதியே தொடங்கி இன்றளவும் அருளோடு இரண்டற நின்றும், சிறிதும் அகில் தோய்ந்து பழமை தோற்றுதல் இல்லாத வெறிய உயிர்கட்கு வீடு சேர்தல் என்பது மிகுதி. எனவே தகாதென்பதாம் என்க.

வெறுமை-பயன் கொள்ளாமை, பழமை தோற்றுதல் - உலகவெறுப்புத் தோன்றுதல்.

இதனால் அருளோடு கலந்து நின்றும் வீடுகூட நினையாத உயிரினைப் பழித்துக் கூறப்பட்டது.

விளக்கம்: தனக்கு ஆதாரமாயுள்ள திருவருளைச் சிந்தையில் இடைவிடாது நினைத்துப் பழகுதலே உயிர்கள் வீடு பெறுதற்குச் சாதனமாம் என்பதனை எதிர்மறைமுகத்தால் உணர்த்துகின்றது.

இற்றைவரை-அனாதியே இருளில் தனித்துக்கிடந்த நில முதலாக, உலகு உடல் கருவி நுகர்பொருள்களைப்பெற்றுள்ள