பக்கம்:திருவருட் பயன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இயைத்து, "தற்சொரூபத்தை யறியாத பெத்தகாலத்திலே எனப் பொருளுரைப்பர் சிந்தனேயுரையாசிரியர். முதல்வனே குருவாக எழுந்தருளி வர வேண்டுமோ? கல்வி கேள்விகளையுடைய ஏனையோர் குருவாக வந்து உயிர் களின் மனமாசினத்திர்த்து மெய்யுணர்வளித்தல் ஆகாதோ? என வினவிய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 42. அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான். இ_ள் : ஒர் இல்லின் கண் ஒருவர் கொண்ட பிணியை அவ்வில்லின்கண் வாழ்வார் அறிவதன்றி, அதனைச் சேய்மைக் கண்ணாகிய உலகத்தார் அறியவல்லரோ தாம். தான் என்பது, அசைகிலே. ஒகாசம், எதிர்மறை இதல்ை, இங்கனம் வடிவுகோடற்கு அருளகல் வேண்டுமோ வென்னும் ஐயத்தினையகற்றி வலியுறுத்தப்பட்டது. விளக்கம் : ஆன்மாக்களின் அகவிருளை நீக்கி மெய் யுணர்வளிக்க எழுந்தருளும் ஆசிரியன், உயிர்க் குயிராய் உள் நின்றுணர்த்தும் முதல்வனையன்றி உலகில் வேருெருவராக இருத்தல் இயலாது என அறிவுறுத்துவது இக் குறட்பாவாகும். அகம்-வீடு. நோய்க்கு-நோயை உருபுமயக்கம். உள் ளினர்.வீட்டினுள்ளே வாழும் அன்பினால் நெருங்கிய உற வினர் முதலியோர். சகத்தவர்.உலகத்தார்; என்றது, அவ் வீட்டினுள்ளேயின்றி அதற்குப்புறம்பாகச் சேய்மைக் கண்ணே வாழ்வாராகிய அயலாரை. காண்பரோ என்புழி ஒகாரம், காணமாட்டார் என எதிர்மறைப் பொருள்தந்து நின்றது. ஒருவீட்டிலே ஒருவர் நோயுற்று வருந்தில்ை அவர்