பக்கம்:திருவருட் பயன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற் ருக்காது நின்றுளத்திற் கண்டிறைவன்-ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றின்ருங் கட்டு’ (சிவஞானபோதம் சூ. 1,வெ-4) என மெய்கண்டார் அருளிய வெண்பாவும் ஈண்டு ஒப்பு நோக்கி யுணரத்தக்கனவாம், நோக்குதல்-அருளாற் பாது காத்தல். அம்மானேநின் அருட்கண்ணுல் நோக்காதார் அல்லாதாரே (6-25-1) என்புழி இச்சொல் இப்பொருளிற் பயின்றமை காண்க. நுணுகுதல்-பொடியாக்குதல்; அழித் தல்; நொடித்தல் என்றதும் அது. அருளாவகையால் அருள்புரிதலாவது, இறைவன் யான் இன்னதற்கு இதுபயனுக இவ்வுயிர்க்கு அருள்புரிகின்றேன் என்னும் தனிக்குறிப்பின்றித் தன்னருளின் காரணங்கள் புறத்தார்க்குப் புலனுகாதவாறு தன்னியல்பில் நின்று அருள் புரிதல் இங்ங்னம், இறைவன் குருவாகவந்து உயிர்கட்கு அருள்புரியுந் திறத்தினே உள்ளவாறு அறியவல்லார் இவ்வுல கின்கண் ஒருவரும் இலர் என்பார், ஆர் அறிவார் புவி? என்றர். அடிகள் செய்வன ஆர்க்கறிவொண்ணுமே? என்ருர் ஆளுடையபிள்ளையாரும். புவி என்புழிக் கண்ணுருபு இறுதிக் கண் தொக்குநின்றது. இனி, இலனென்னும் எவ்வம் உரையாமையிதல் (திருக் குறள்-223) என்புழிப்போன்று, அருளாவகையால் அருள் புரியவந்த பொருள்' என்பதற்கு, தன்னுல் தலையளிக்கப் பெறும் நல்லுயிர், பின்னும் ஒருவர்பாற்சென்று அருள்பெற வேண்டிய நிலைமை ஏற்படாதவாறு தன்னருளேக் குறை வின்றி நிறையப்பெற்றுத் தன்னைப்போன்று மன்னுயிர்கட்கு அருள்வழங்கும் நிலேயில் தானேயாய் ஒற்றித்து உடனுகும்