பக்கம்:திருவருட் பயன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மயமாகிய அருளும் அவ்வருளான் ஆகிய தேசிக வடிவும் என்னும் உண்மைப் பொருள் இரண்டினையும் சிறிதும் -Płறி யமாட்டார். இத்தன்மையவாகிய ஆசாரிய வடிவினை, அருள்கொண்ட வடிவமாக வுணrார் ஆகவே, கின்மலமாய், அகண்டமாய், சின்மயமாய், ஒழிவற நிறைந்த அவ்வருளினையும் உணr மாட்டார் என்பது கருத்து. விளக்கம்: கட்புலனுக எழுந்தருளிய ஆசிரியத்திரு மேனியை வழிபடுமாறு அறியாதார். சிந்தையாலும் சிந்தித் துணர்தற்கரிய சிவனருளின் திறமுணர்ந்து திருவருளும் குரு வடிவும் ஆகிய அவ்விரண்டும் ஒன்றேயெனத் தொடர்பு படுத்தியுணரும் உண்மையினே உணரமாட்டார் என்பது உணர்த்துகின்றது. பொய்யையும் இருண்ட சிந்தையையும் பொறியின்மை யையும் ஒருங்கேயுடையார் என்பது புலப்படுத்துவார்."பொய் இருண்ட சிந்தைப் பொறியிலார்’ எனக்குறித்தார். பொய்” என்றது, நிலேயில்லாத உடம்பில் வாழும் வாழ்க்கையை. "இருண்டசிந்தை” என்றது இருள்மலமாகிய ஆணவமலத்தால் மறைந்த உணர்வினே. பொறி' என்றது ஈண்டு ஞானமாகிய நற்பேற்றின. போதம்-அறிவும்யமாகிய திருவருள். போதம் ஆம்மெய்-அத்திருவருளாலாகிய ஆசிரியத்திருமேனி. தமக்குக் கட்புலனுக் காட்சிதந்து எழுந்தருளிய ஆசிரியத்திருமேனியை வழிபட்டு அதன் இயல்பினேயுணர்ந்து உய்யும் உணர்வு பெருத உலகத்தார் அத்திருமேனிக்குக் காரணமாய்த் தோன் ருத் துணையாய் யாண்டும் நீக்கமறக்கலந்து மாற்றமனங் கடந்து நிற்கும் திருவருளே உணரும் வன்மையினே ஒருசிறிதும் உடையரல்லர் என்பார், 'போதம்-ஆம்மெய்-இரண்டும் மிகக்காணுர்’ என்ருர்,