பக்கம்:திருவருட் பயன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10% இறைவன், மூவகை ஆன்மாக்களுக்கும் அருள்வழங்கும் முறைமையினே, ' மெய்ஞ்ஞானந் தானே விளேயும்விஞ் ஞானகலர்க் கஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான்குருவாய் முன் ’’ (சிவஞானபோதம் சூத்திரம்-8. வெ. 47) எனவரும் வெண்பாவில் ஆசிரியர் மெய்கண்டார் விரித்துக் கூறியுள்ளமையும்,

  • நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினேயும்

அந்திலேயே உள்நின் றறுத்தருளிப்-பின்னன்பு மேவா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப்-பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்னின்று மும்மலந்திர்த் தாட்கொள்கை -அன்னவனுக் காதிகுணம் ஆதலினல் ’’ (போற்றிப் பஃருெடை} என இந்நூலாசிரியர் விரித்துக்கூறியுள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கியுணர்தற்குரியனவாகும். எல்லாம்வல்ல இறைவன் ஆசிரியனுகத்திருவுருத்தாங்கி அலேயும் முயற்சியினேவிட்டு, அருவாய்நின்று ஆன்மாக் களுக்கு அருள்வழங்கலாகாதோ என வினவிய மாணுக்கர்க்கு, குருவாக கருதலின் இன்றியமையாமையை அறிவுறுத்துவது, அடுத் துரும் குறட்பாவாகும். 43. ஆர திவார் எல்லாம் அகன்ற நெறியருளும் பேரறிவான் வாராத பின்