பக்கம்:திருவருட் பயன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ஒடுங்கி நிற்றல், திருவருள் ஞானத்தாற் பெறுதற்குரியதாகிய பேரின்பம் ஒன்றையே விரும்பி, ஆன்மாவாகிய உன்னறிவு முனேத்துத் தோன்ருது முதல்வனது பேரறிவே யாண்டும் மேற்பட்டு விளங்கும் வண்ணம் அதன்கண் அடங்குக என்றவாறு. திருவருள் ஞானத்தினக் கண்டு கூடிய உயிர், அத் திருவருளின் வயத்ததாய் ஒழுகுமாறு எவ்வாறு? என வினவிய மாணக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 60. கண்டபடி யேகண்டு காளுமை காணுமை கொண்டபடி யேகொண் டிரு. இ-ள்: ஞானமானது உனக்கு யாதொரு படியே வெளிப்பட்டது, அப்படியே யுேம் கண்டு, அறியாமையாகிய அதீதாவத்தை வந்து தோன்ருமல், யாதொருபடி உன்னை விழுங்கிற்று அப்படியே நீயும் விழுங்கக் கொடுத்திருப்பாயாக இம்மூன்று பாட்டாலும் ஞானத்தினைக் காணுமாறும், கண்டால் அதனுட் கலக்குமாறும், அவ்வழித் தன்னை அதன் வயத்தன் ஆக்குமாறும் கூறப்பட்டன. மாணவகனே' என்பது, இம் மூன்றிற்குங் கூட்டியுரைக்கப்பட்டது. விளக்கம்: இஃது அருள் ஞானத்திற் கலக்கும்பேறு பெற்ற ஆன்மா, அவ் அருளின் வயத்ததாய் ஒழுகும் முறை மையினே உணர்த்துகின்றது. கண்டபடி-கட்புலகை வெளிப்பட்ட முறைமை. கண்ட படியே காணுதலாவது, தன்னுணர்வு புறத்தே செல்லாது அக்காட்சியிலேயே கருத்து ஒன்றியிருத்தல். காணுமை காணுமை’ என்பவற்றுள் முன்னது, பெயர்: பின்னது மையீற்று வினையெச்சம் காணுமை-அறியாமையாகிய அதி