பக்கம்:திருவருட் பயன்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 யும், சகலனாகியும், சுத்தணுகியும் கூடினதன் தன்மையாய் நிற்கையாலே படிகத்தை உவமை சொன்னதென அறிக’ (சிவப்பிரகாசம்-59) எனவும், 'ஆதித்தப் பிரகாசத்தினலே படிகத்திலே வன்னங்கள் பிரதிபிம்பஞ் செய்யுமிடத்து அந்த ஆதித்தன் சாய ஒடும் பொழுது அதிலே பிரதிபிம்பஞ் செய்தும், அந்த ஆதித்தன் மத்தியானமானபொழுது அந்தப்படிகத்தின் உச்சியிலே நேர் பட்ட அவதரத்து அந்தவன்னங்கள் கூடியிருக்கச் செய்தே அந்தப்படிகம் வன்னங்களிற் பற்ருமல் ஆதித்தப் பிரகாசத் தைக் கவர்ந்துகொண்டு நின்ருற்போல, அந்தத் திருவருள் ஞானமும், ஆன்மாக்களுக்கு மலபாகம் வாராத நாளெல்லாம் பிரபஞ்சத்திலே புசிப்பித்து, மலபாகம் வந்த அவதரத்து அந்தப் பிரபஞ்சப் பற்றறும்படி நேர்பட்டுத் திருவருளேக் கடாகஷித்து நிற்கையால் அப்படிச் சொன்னதென அறிக. இதற்குப் பிரமாணம் திருவருட்பயனில் 'தனக்கு நிழலின்ரும் ஒளி கவருந் தம்ப.மெனக்கவர நில்லாதிருள்” (67) என்பது கண்டுகொள்க’. (சிவப்பிரகாசம்-691. எனவும், மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கங்கள் இங்கு மனங்கொள்ளத் தக்கனவாகும். ஆன்மா, தன்கண் ஆணவமலந் தோன்றமல் அருளே நிகழ நிற்பது எவ்வாறு? என வினவிய மாணுக்கர்க்கு அறி வுறுத்துவதாக அமைந்தது அடுத்துவரும் குறட்பாவாகும். 68. உற்கை தரும் பொற்கை யுடையவர்போல் நிற்கை யருளார் நிலை. (உண்மைப்பின் இ-ள் : தழற்கொள்ளியினைப் பிடித்திருக்கும் அழகிய கையினே யுடையோர், தாம் வேண்டிய பொருள்களைக் காணு மளவும் அதனை முன்னிட்டுத் தாம் பின்னிற்குமாறு போல, ஞேயமானது வெளிப்படுமளவும் அருளேத்தமக்கு முன்குக்கித்