பக்கம்:திருவருட் பயன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தாம் அதன் பின்னிற்றலே அருளோடு பொருந்தி நிற்கும் கிலேயாவது என்க. இதல்ை, அருளோடு பொருங்கி கிற்கும் உபாயங் கூறப் பட்டது. விளக்கம் : ஆன்மா அருளே முன்னிட்டுக்கொண்டு நிற்கும் முறைமையினே உணர்த்துகின்றது. அருளார்நில, உற்கை தரும் பொற்கையுடையவர்போல் உண்மைப்பின் நிற்கை-என இயையும். அருள் ஆர்நிலை-அரு ளோடு பொருந்திநிற்கும் நிலை. ஆர்தல்.பொருந்துதல், உற்கை-தழற்கொள்ளி, கொள்ளிக்கட்டை; இச்சொல் தீவட்டி, கைவிளக்கு என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது. பொன் + கை=பொற்கை என னகரம் றகரமாகத்திரிந்தது. பொன்கை -அழகியகை. உண்மை-மெய்ப்பொருள்; என்றது, அதனின் வேருகாத திருவருளே. உண்மைப்பின் நிற்கையாவது, ஆன்மா திருவருளே முன்னிட்டுத் தற்போதம் அடங்கி அவ்வருளின்வழி ஒழுகுதல். "அழகிய உள்ளங்கையிலே விளக்கை முன்னிட்டுப் பதார்த்தங்களைக் காண்கிறவர்களைப்போல, தற்போதஞ்சீவி யாமல் சிவஞானத்தை முன்னிட்டு நிற்கிறதே அருளேயடைந்த வர்கள் முறைமை” எனப் பொருள் உரைப்பர் சிந்தனேயுரை யாசிரியர். இவ்வுரையில் அருளார்’ என்பது, அருளேயடைந் தவர்கள் என்ற பொருளில் ஒருசொல்லாகக் கொள்ளப்பட்டது. ஆன்மா, ஜம்புலன்களாகிய கருவிகளின் துணேகொண்டு எதனேயும் அறியும் முறையில் திருவருளின் துணேயின்றிப் பேரின்பத்தைத் தானே அடைதல் இயலாதோ? என வின விய மானுக்கர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.