பக்கம்:திருவருட் பயன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 போலாத, இறைவன் அகுகிமல முத்தகுதலான் அவற்கு இல்லையென்றருளிச் செய்தார். புதிதாக வந்ததன்மென்பது கருத்து. இதல்ை, உயிர்களுக்குக் கொடுப்பதன்றி இறைவன் தானும் அவ்வின்பத்தினை நுகர்வனே என்னுஞ் சங்கை யினே அகற்றிக் கூறப்பட்டது. விளக்கம்: இறைவனுல் ஆன்மாவுக்கு இன்பமேயன்றி ஆன்மாவில்ை இறைவனுக்கு எய்தக் கடவ இன்பம் எதுவு மில்லை என்பது உணர்த்துகின்றது. எய்துவார்க்கு இன்பதன. ஈயும் அவர்க்கு உருவம் இன்ப கனம்; ஆதலினுல் (அவர்க்குப் பிறர்தரும் இன்பம் ஏதும்) இல்-என வேண்டுஞ் சொற்களே விரித்துப் பொருள்கொள்க. 'பொருந்துகிற பெயர்களுக்கு இன்பத்தைக் கொடுப்பன்: கர்த்தாவுக்குத் திருமேனி இன்பக்கட்டி, அதென்போலவென் னில், சர்க்கரையைப் புசிக்கிறவன் ரசம் பெறுவதொழிந்து அவன் சர்க்கரைக்குக் கொடுக்கும் ரசமில்லை. ஆகையினுலே ஆன்மாக் கர்த்தாவுக்கு இன்பத்தைக்கொடுக்க வேண்டுவ தில்லை’’ என்பது, சிந்தனையுரை, இன்பகனம்-இன்பக்கட்டி’ தன்னே அடைந்தார் எல்லார்க்கும் இன்பம் நல்குதல் இறை வனதியல்பென்பது, ‘சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்’ (1-113–5) தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானே? - (2-40-11) இனியன் தன்னடைந்தார்க் கிடைமருதனே' (3-14-10) 'இறைவா எம்பெருமான் - எனக்கின்னமுதாயவனே"(7:27-2)