பக்கம்:திருவருட் பயன்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 “ஈறிலாப் பதங்கள் யாவையுங்கடந்த இன்பமே என்னுடை யன்பே (திருவாசகம்-389) பெறவேவேண்டும் மெய்யன்பு பேராவொழியாப் பிரிவில்லா மறவா நினையா அளவிலா மாளா இன்பமாகடலே? (திருவாசகம்-490) என ஆளுடைய அடிகளும் அருளிய அனுபவமொழிகளேயும், 'இன்பம் இடையருது ஈண்டும்; அவா என்னும் துன்பத்துள் துன்பங் கெடின் (திருக்குறள்-369) என்னும் தெய்வப் புலவர் பொருளுரையையும் அடியொற்றி யமைந்தது, இவ்வதிகாரத்துப் பத்தாங்குறளாகும். பேரின்பத் திற்குத் தடையாகவுள்ள அவாவினத் துன்பத்துள் துன்பம்’ ೯TಐT அடைகொடுத்தோதியதனே யுளங்கொண்ட உமாபதி சிவாசாரியார், அத்துன்பத்திற்கு மறுதலேயாகிய பேரின்யத் தினே'இன்பிலினிது’ என அடைகொடுத்தோதிய திறம் கூர்ந்து நோக்கத் தக்கதாகும். "துன்பத்துள் துன்பம்’ என்பதற்கு, ‘ஏனேத்துன்பங்களெல்லாம் இன்பமாகவரும் துன்பம்’ என, விளக்கங்கூறினர் பரிமேலழகர். அவர் கருத்தினையடியொற்றி ‘ஏனே இன்பங்களெல்லாம் துன்பம் என உவர்த்து ஒதுக்கும் நிலேயில் வரும் சிவானந்தமாகிய பேரின்பத்தினே, இன்பில் இனிது’ என இந்நூலாசிரியர் குறித்ததிறம் உணர்ந்து மகிழத் தக்கதாகும். இத்தகைய பேரின்பத்தின இம்மையிலேயே அடைதல் இயலும் என்னும் உண்மையினே, சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனே யாயிற் பலவுடன்